• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-06 12:24:44    
சீனப் பொருளாதாரத்தின் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கை

cri

சீன தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதியான உலக வங்கியின் துணைத் தலைவரும் முதன்மை பொறியியலாளருமான லிங் யீ புஃ மார்ச் 5ம் நாள் துவங்கிய பேரவையின் ஆண்டு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிருந்தது. ஆனால் உலக வங்கியின் கடமைகளின் காரணமாக அவர் பேரவையின் செயலகத்திடம் விடுப்பு பெற விண்ணப்பம் செய்தார். இருப்பினும் செய்தியாளருக்கு பேட்டியளித்த போது அவர் கூட்டத்தின் மீதான  கவனத்தைத் தெரிவித்தார். பணி காரணமாக பெய்ஜிங்கிலிருந்து தொலைதூர இடத்தில் இருக்கின்ற போதிலும் சீனப் பொருளாதாரத்தில் தான் செலுத்தும் கவனம் குறைய வில்லை. சீன அரசு முன்வைத்த உள்நாட்டுத் தேவையை விரிவுபடுத்தி நுகர்வை அதிகரித்து வளர்ச்சியை முன்னேற்றுவதென்ற நடவடிக்கையில் மேலும் கவனம் செலுத்துவதாக லிங் யீ புஃ கூறினார்.


4ம் நாள் அழைப்பின் பேரில் அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய சீனா பற்றிய கருத்தரங்கில் அவர் கலந்து கொண்டு சொற்பொழிவு ஆற்றினார். உலக நிதி நெருக்கடியில் சீனாவின் ஒட்டுமொத்த பொருளாதாரம் குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கப்பட்டது. பொருளாதார வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த சீன அரசு 4 இலட்சம் கோடி யுவான் மதிப்புள்ள பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தை வெளியிட்டது. இது பொருளாதாரத்தை காப்பாற்றுவதில் சீனா மேற்கொண்ட முதலாவது முயற்சியல்ல. கடந்த 90ம் ஆண்டுகளில் ஆசிய நிதி நெருக்கடி நிகழ்ந்த போது சீனா இதே மாதிரி திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. அத்துடன் சிறந்த சாதனைகள் அதன் மூலம் பெறப்பட்டன என்று அவர் கூறினார்.


சீன அரசு உள்நாட்டுத் தேவையை விரிவுப்படுத்தி நுகர்வை அதிகரித்து வளர்ச்சியை முன்னேற்ற திட்டமிட்ட குறிக்கோள் மிகவும் தெளிவானது. உலகுப் பொருளாதார வீழ்ச்சி சீனாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் அதேவேளையில் பொருளாதார கட்டமைப்பை சரிப்படுத்தி நீண்டகால வளர்ச்சியை தூண்ட சீனாவுக்கு அது வாய்ப்பையும் ஏற்படுத்தியது. உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் சீனா நெருக்கடியை வாய்ப்பாக மாற்ற முடியும் என்று அவர் மேலும் கூறினார்.


நெருக்கடியினால் ஏற்பட்ட பாதிப்பை பயன்மிக்க முறையில் கட்டுப்படுத்தினால் அடுத்த பத்து ஆண்டுகள் அதற்கு மேல் நீண்டகாலத்தில் கூட ஆண்டுக்கு 9 விழுக்காட்டுப் பொருளாதார அதிகரிப்பை நிலைநிறுத்துவதில் சீனாவுக்கு உள்ளார்ந்த ஆற்றல் உண்டு என்று லிங் யீ வு நம்பிக்கை தெரிவித்தார்.