• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-06 17:35:28    
உலக நிதி நெருக்கடியை சமாளிப்பதில் சீனாவின் நம்பிக்கை

cri

கடந்த 6 திங்களாக, சர்வதேச நிதி நெருக்கடியால், வருமானம் மற்றும் வேலை வாய்ப்பு குறைவை, சீன மக்கள் பொதுவாக உணர்ந்து கொண்டனர். அத்துடன், பொருளாதார அதிகரிப்பின் தணிவு, கடினமான புதிய வேலை வாய்ப்பு நிலைமை, தொழில் நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் செயல்பாட்டு இன்னல்கள் முதலிய அறைகூவல்களையும் சீன அரசு எதிர்நோக்குகின்றது. உலக நிதி நெருக்கடியைச் சமாளித்து, பொருளாதாரத்தின் நிதானமான விரைவான அதிகரிப்பை உத்தரவாதம் செய்ய, சீன அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.

இதற்கு, 2008ம் ஆண்டின் பிற்பாதி முதல், உள்நாட்டுத் தேவையை விரிவாக்குவது, பொருளாதார அதிகரிப்பை நிலைநிறுத்துவது ஆகியவற்றை முக்கிய பணிகளாக சீன அரசு உறுதிப்படுத்தியதோடு, ஆக்கப்பூர்வமான நிதிக் கொள்கையையும் ஓரளவு இறுக்கமற்ற நாணய கொள்கையையும் நடைமுறைப்படுத்தி வருகின்றது. அதே வேளையில், 4இலட்ம் கோடி யுவான் மதிப்புள்ள பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம், இரும்புருக்கு, நெசவு, வாகன உற்பத்தி உள்ளிட்ட 10 முக்கிய தொழிற்துறைகளுக்கான சரிப்படுத்தல் மற்றும் மறுமலர்ச்சி திட்டம் முதலிய ஒரு தொகுதி கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் சீன அரசு வகுத்துள்ளது. சீனத் தேசிய மக்கள் பேரவை மற்றும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் ஆண்டுக்கூட்டத்தொடர்களில் கலந்து கொள்கின்ற பிரதிநிதிகளும் உறுப்பினர்களும், மேற்கூறிய கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் முழுமையாக உறுதிப்படுத்தினர். எடுத்துக்காடாக, சர்வதேச நிதி நெருக்கடியால், தற்போது, சீனாவில் மூன்றில் இரண்டு பங்கு நெசவு தொழில் நிறுவனங்கள் சிக்கி தவிக்கின்றன. இந்த நிலைமையில், நெசவு தொழில் நிறுவனங்களின் நிதி நிர்ப்பந்தத்தை தளர்த்தி, தொழில் நுட்ப புதுமைகளை விரைவுப்படுத்தி, போட்டியாற்றலை வலுப்படுத்த  நெசவு தொழிற்துறை வளர்ச்சி திட்டம் துணை புரியும் என்று சீனாவின் ஒரு பெரிய நெசவுத் தொழில் நிறுவனத்தின் பொறுப்பாளர் Qi Xiaojin அம்மையார் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:

அண்மையில் வெளியிடப்பட்ட நெசவுத் தொழிற்துறையை வளர்க்கும் திட்டத்தால், சீனாவில் நெசவுத் தொழிற்துறையின் முக்கிய தகுநிலை தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டது. இது, நெசவு தொழில்துறையின் சீரான வளர்ச்சியை உத்தரவாதம் செய்யும் என்றார் அவர்.

உலக நிதி நெருக்கடியை சமாளிப்பதற்கான பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் நடைமுறையாகி குறுகிய காலமான போதிலும், அவை அதிக பயன் மற்றும் உள்ளார்ந்த ஆற்றல் கொண்டுள்ளன. இந்த குறுகிய காலக்கட்டத்திலும், இந்த கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளால் ஏற்பட்ட பலன்கள் தெளிவாக தெரிய வந்துள்ளது. சில பொருளாதார தகவல்கள் மூலம், சீனப் பொருளாதார நிலைமை மீட்கப்பட துவங்கியுள்ளது தெரிகிறது என்று சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் தலைவர் Zhang Ping 6ம் நாள் பெய்சிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

இந்த நடவடிக்கைகள் பயன்களை பெற்றுள்ளன. குறிப்பாக மென்ரக கருவிகள் மற்றும் நெசவுப் பொருட்கள் உள்ளிட்ட உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி எண்ணிக்கை ஓரளவு அதிகரித்துள்ளது என்றார் அவர்.

பெய்சிங்கில் நடைபெற்ற சீனத் தேசிய மக்கள் பேரவையின் ஆண்டுக் கூட்டத்தொடரில் 5ம் நாள் அரசு பணியறிக்கையை வெளியிட்ட போது, உலக நிதி நெருக்கடியை சமாளிப்பது, பொருளாதார அதிகரிப்பை நிலைநிறுத்துவது ஆகியவை, இவ்வாண்டில் சீன அரசின் முதல் கடமையாகும் என்று சீனத் தலைமையமைச்சர் வென்ச்சியாபாவ் உறுதியாக தெரிவித்தார். மேலும், சீனச் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படை நிலைமையை சீனா நீண்டகாலமாக சீராக வளர்க்கும் போக்கும் மாறவில்லை. மாபெரும் உள்நாட்டுத் தேவை, ஒராளமான நிதித்தொகை முதலிய சாதகமான காரணங்களால், தற்போதைய இடர்பாட்டைச் சமாளித்து அறைகூவலை வெற்றிகரமாக கையாள்வதற்கான நம்பிக்கை, நிபந்தனை மற்றும் ஆற்றல் ஆகியவை, சீனாவுக்கு உண்டு என்று வென்ச்சியாபாவ் வலியுறுத்தினார்.

தவிர, இவ்வாண்டில், உத்தரவாத தன்மை வாய்ந்த உறைவிட கட்டுமானம், கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவ சிகிச்சை மற்றும் சுகாதாரம் முதலிய முக்கிய துறைகளில் சீன அரசு ஒதுக்கும் தொகை, 90ஆயிரம் கோடி யுவானுக்கு மேலாகும். இது, 2008ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட வரவு செலவு நிதி தொகையை விட, ஒரு மடங்கு அதிகமாகும்.

இவ்வாண்டின் பொருளாதார அதிகரிப்பு வேகத்தின் இலக்கை 8விழுக்காடாக சீன அரசு வகுத்துள்ளது. பல இடர்பாடுகளை எதிர்நோக்குகின்ற போதிலும், சீன அரசும் மக்களும் இந்த இலக்கை நனவாக்குவதில் நம்பிக்கை கொள்ண்டுள்ளனர்.