சீன தேசிய மக்கள் பேரவை மற்றும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் ஆண்டுக் கூட்டத்தொடர்கள் பெய்சிங்கில் நடைபெற்று வருகின்றன. நிதி நெருக்கடியை சமாளித்து, உள்நாட்டுத் தேவையை விரிவாக்குவதில் சீனா மேற்கொள்ளும் கொள்கைகளில், இந்திய நேயர்கள் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்தியாவின் மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த நேயர் அனீர் குமார் இது குறித்து அனுப்பிய மின்னஞ்சலில், நிதி நெருக்கடியைச் சமாளிக்க, சீன அரசு மேற்கொள்ளும் கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் உயர்வாக பாராட்டினார். உள்நாட்டுத் தேவையை விரிவாக்கும் நடவடிக்கைகள் பலன்களை பெறுவது உறுதி என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
|