மார்ச் 7ம் நாள் முற்பகல் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சர் யாங்ச்சியேச்சு சீனாவின் தூதாண்மை கொள்கை மற்றும் வெளிநாடுகளுடனான உறவு தொடர்பான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
கடந்த ஓராண்டில் வெளிவிவகாரத் துறையில் சீனா பெற்றுள்ள முக்கிய சாதனைகளைத் தொகுத்ததோடு இவ்வாண்டின் வெளிவிவகாரங்கள் தொடர்பான சீனாவின் நான்கு முக்கிய அம்சங்களை சீன வெளியுறவு அமைச்சர் யாங்ச்சியேச்சு விளக்கிகூறினார். உள்நாட்டின் நிதானமான விரைவான பொருளாதார வளர்ச்சியை முழுமூச்சுடன் உத்தரவாதம் செய்வதற்கு சேவைபுரிவது, சர்வதேச நிதி நெருக்கடியை உற்சாகத்துடன் சமாளிப்பது, பாதுகாப்பான தூதாண்மை கொள்கையை மேற்கொள்வது செவ்வனே செய்து, துணை நிலை தூதரகப் பணியை நிறைவேற்றுவது, வல்லரசுகள் அண்டை நாடுகள் மற்றும் மிகப் பல வளரும் நாடுகளுடனான உறவை நிதானமாக வளர்ப்பதை முன்னேற்றி பிரதேச பிரச்சினைகளை உகந்த முறையில் தீர்ப்பதில் மேலும் ஆக்கப்பூர்வமாக பங்கு கொள்வது என்பன வெளிவிவகாரங்களில் முக்கிய அம்சங்களாகும்.
சர்வதேச நிதி நெருக்கடி பற்றி சீன வெளியுறவு அமைச்சர் யாங்ச்சியேச்சு குறிப்பிடுகையில் பல்வேறு நாடுகளுடன் இணைந்து இந்த நெருக்கடியைச் சமாளிக்கச் சீனா விரும்புவதாக தெரிவித்தார். பல்வேறு தரப்புகளின் முயற்சியுடன் லண்டன் உச்சி மாநாடு ஆக்கப்பூர்வமானச் சாதனைகளைப் பெறும் என்று சீனா நம்புவதாக அவர் கூறினார்.
வெளிநாட்டுறவு பற்றி குறிப்பிடுகையில் சீன அரசுக்கும் புதிய அமெரிக்க அரசுக்குமிடையிலான உறவுக்கு சிறப்பான துவக்கம் உண்டு என்று சீன வெளியுறவு அமைச்சர் யாஞ்சியெஸு தெரிவித்தார். அமெரிக்கா தவிர ரஷியாவுடனான உறவை சீனா மேலும் வலுப்படுத்தும் சீன-ஜப்பானிய உறவில் சில பிரச்சினைகள் நிலவுகின்ற போதிலும் சீனாவும் ஜப்பானும் உணவுப் பாதுகாப்புப் பிரச்சினை பற்றி நீண்டகால ஒத்துழைப்பு அமைப்பு முறையை நிறுவுவதோடு கிழக்கு கடற்பிரச்சினை பற்றி ஏற்கனவே உருவாக்கப்பட்ட கோட்பாட்டுக்கு இணங்க கையாள வேண்டும் என்று யாஞ்சியெஸு தெரிவித்தார்.
தற்போதைய சீன-பிரான்ஸ் உறவில் நிலவிய பிரச்சினை குறித்து இது தொடர்பான பொறுப்பு சீனத் தரப்பில் நிலவ இல்லை. சீனாவின் கவனத்திற்கு பிரான்ஸ் நேரடி ஆக்கப்பூர்வமான பதில் அளிக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் யாங்ச்சியேச்சு கூறினார்.
|