• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-07 16:03:53    
உலகத்திற்கு சீனா காட்டிய நம்பிக்கை

cri

மார்ச் 7ம் நாள் முற்பகல் பெய்ஜிங்கில் 11வது சீன தேசிய மக்கள் பேரவையின் இரண்டாவது கூட்டத் தொடர் செய்தியாளர் கூட்டம் நடத்தியது. சீன வெளியுறவு அமைச்சர் யாங்ச்சேச்சு கூட்டத்தில் சீனாவின் தூதாண்மை கொள்கை மற்றும் பல்வேறு நாடுகளுடனான அதன் உறவு உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பான செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். சர்வதேச நிதி நெருக்கடி கட்டற்றமுறையில் பரவிய பின்னணியில் இதைச் சமாளித்து பொருளாதாரத்தின் நிதானமான விரைவான வளர்ச்சியை நிலைநிறுத்துவது என்பது சீன அரசுப் பணியில் முக்கிய அம்சமாகியுள்ளது. சீனாவின் நடவடிக்கைகள் உலகத்திற்கு கொண்டு வருவது என்ன? இவ்வாண்டு சீன தூதாண்மைப் பணியில் முக்கிய அம்சம் என்ன?


இவை பற்றி சீனத் தலைமை அமைச்சர் வென்சியாபாவ் அரசுப் பணியறிக்கையில் தெளிவாக விளக்கினார். அதாவது பல்வேறு நாடுகளுடனான நட்பார்ந்த பரிமாற்றத்தை வலுப்படுத்தி உள்நாட்டுப் பொருளாதாரத்தின் நிதானமான விரைவான வளர்ச்சிக்கு சாதகமான வெளிப்புற சூழ்நிலையை உருவாக்குவது என்பதாகும்.


இது பற்றி வென்சியாபாவ் கூறியதாவது. நாம் தொடர்ந்து நடைமுறைக்கு ஏற்ற ஒத்துழைப்பை பல்வேறு தரப்புகளுடன் ஆழமாக்கி சர்வதேச நிதி நெருக்கடி மோசமாவதைக் கூட்டாக கட்டுப்படுத்தி சர்வதேச  நிதி அமைப்பு முறையின் சீர்திருத்தத்தை முன்னேற்ற வேண்டும். வர்த்தக மற்றும் முதலீட்டுப் பாதுகாப்பு வாதத்தை எதிர்த்து உலகப் பொருளாதாரம் கூடியவிரைவில் மறுமலர்ச்சியடைவதைத் தூண்ட வேண்டும் என்று அவர் கூறினார்.


இன்று நடைபெற்ற செய்தியாளர கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் யாங்ச்சேச்சு தெளிவான கருத்துக்களை முன்வைத்தார். அவர் கூறியதாவது. நாட்டின் பொருளாதாரத்தின் நிதானமான விரைவான வளர்ச்சியை உத்தரவாதம் செய்ய செவ்வனே சேவைபுரிய வேண்டும். அதேவேளையில் உற்சாக மனப்பான்மையுடன் சர்வதேச நிதி நெருக்கடியைச் சமாளித்து சர்வதேச பலதரப்புக் கூட்டங்களில் சீனத் தலைவர்கள் கலந்து கொள்வதற்கான ஆயத்தப் பணியையும் நடைமுறையாக்கத்தையும் செவ்வனே செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.


உண்மையில் நிதி நெருக்கடியைச் சமாளிக்க சர்வதேச ஒத்துழைப்பு முன்மொழியப்படுவதற்கு முன்பே சீனா இதற்காக முயற்சிக்கத் துவங்கியது. கடந்த நவம்பர் திங்கள் சீன அரசுத் தலைவர் ஹுச்சிந்தாவ் வாஷிங்டனில் 20 நாடுகளின் நிதி உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். இவ்வாண்டின் துவக்கத்தில் அரசுத் தலைவர் ஹுச்சிந்தாவ், தலைமை அமைச்சர் வென்சியாபாவ், துணை அரசுத் தலைவர் ஷீச்சிங்பிங் ஆகியோர் "ஜனவரி திங்கள் தூதாண்மை நடவடிக்கையை" மேற்கொண்டனர். அவர்கள் அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா முதலியவற்றில் பயணம் செய்தனர். எங்கு சென்ற போதும் சர்வதேச ஒத்துழைப்பின் மூலம் மற்ற நாடுகளுடன் இணைந்து நிதி நெருக்கடியைச் சமாளிக்கும் மன உறுதியை அவர்கள் உலகத்திற்கு வெளிப்படுத்தினர்.


தலைமை அமைச்சர் வென்சியாபாவ் பிப்ரவரியில் ஐரோப்பிய பயணத்தை முடித்ததுடன் சீன வணிக அமைச்சர் சென்தேமிங்கை தலைவராக கொண்ட சீன முதலீட்டு வர்த்தக முன்னேற்ற குழு 1500 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள கொள்வனவு முன்பதிவு உடன்படிக்கைகளை பல நாடுகளின் தொழில் நிறுவனங்களுடன் கையொப்பமிட்டு ஐரோப்பிய பயணத்தை இனிதே முடித்தது.
சீனா மேற்கொண்ட தூதாண்மை நடவடிக்கைகள் சர்வதேசச் சமூகத்தால் போதியளவில் உறுதிப்படுத்தப்பட்டு ஆதரவளிக்கப்பட்டுள்ளன. சீனாவுக்கான பிரேசில் தூதர் ஹூகுனே இது பற்றி கூறியதாவது. பிரேசிலை எடுத்துக்காட்டாக கூறலாம். வளரும் நாடாகிய  பிரேசில் சீனாவுடன் இணைந்து பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்பை மேற்கொள்ள விரும்புகின்றது என்றார் அவர்.