சீனாவின் திபெத்தில் திபெத் மரபுவழி புத்தமதம் சீராக வளர்ந்துள்ளது. தற்போது திபெத்தில் 1700க்கும் அதிகமான கோயில்கள் இருக்கின்றன. 46 ஆயிரத்துக்கு மேலான ஆண் மற்றும் பெண் துறவிகளும் 280 வாழும் புத்தர்களும் மதப்பிரச்சாரம் செய்கின்றனர். அவர்களின் எண்ணிக்கை உலகில் ஒரே இடத்தில் அதிகமாக இருக்கின்ற மரபுவழி புத்தமதத்துறவிகளின் எண்ணிக்கையில் மிக அதிகமானதாகும் என்று சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டியின் நிரந்தர உறுப்பினரும் சீன புத்தமதத் சங்கத்தின் திபெத் கிளைத் தலைவருமான ச்சுக்காங் துத்தன்க்ச்சு 6ம் நாள் தெரிவித்தார்.
மத நம்பிக்கையுடைய மக்களின் வீடுகளில் அன்றாட மத வாழ்க்கைப் பொருட்கள் உள்ளன. துறவிகள் கோயிலில் அமர்ந்து திருமறை ஓதுகின்றனர். பொது மக்களிடையில் அவர்கள் மத நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். சுதந்தர மத நம்பிக்கையின் அம்சங்களாக இவையனைத்தும் காணப்படுகின்றன. இது கடந்த 50 ஆண்டுகளில் திபெத்தில் ஜனநாயக சீர்திருத்தம் பெற்றுள்ள சாதனைகளில் ஒன்றாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
|