தலாய் லாமா குழு வெளிநாடுகளில் பரப்புரை செய்யும் போது முக்கியமாக அதன் செயல்பாட்டைக் கண்காணிக்க வேண்டும் என்று சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைவர் சியாங்பாபிங்சோ கூறினார். 6ம் நாள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் செய்தி ஊடகங்களுக்கு பேட்டியளித்த போது அவர் இவ்வாறு கூறினார்.
தலாய் லாமா பெரிய திபெத் என்றும் உயர் தன்னாட்சி என்றும் முன்வைக்கிறார். இது நேரடியற்ற சுதந்திர வாதமாகும். இதற்கு வரலாற்று ஆதாரம் கிடையாது. நிறைவேற்றப்பட வேண்டிய அம்சம் ஏதுமில்லை. மக்களும் இது பற்றி எந்த கோரிக்கையும் முன்வைக்கவில்லை என்று அவர் கூறினார்.
உயர் தன்னாட்சி பற்றிய கேள்விக்கு பதிலளிக்கையில் சீன மக்கள் குடியரசின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் திபெத் தன்னாட்சிப் பிரதேசம் சீனா என்ற அரசியல் அமைப்பில் சேர்ந்துள்ளது மக்கள் உயர்வான தன்னாட்சி உரிமையை அனுபவிக்கின்றனர் என்று தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆகவே தலாய் லாமா எந்த விதமாக தன்னாட்சியை நடைமுறைப்படுத்த விரும்புகிறார் என்பது புரிய வில்லை என்று அவர் கூறினார்.
|