பழைய திபெத்தில் மனதளவில் உடலளவிலும் கடுமையான அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்ட மகளிர், தற்போது, முன்னென்றும் கண்டிராத சமூகத் தகுநிலை மற்றும் பல்வேறு உரிமை நலன்களைக் கொண்டுள்ளனர். அரசியல், பொருளாதாரம், பண்பாடு, சமூகம், குடும்பம், கல்வி உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும், அவர்கள் ஆடவருடன் சம உரிமைகளைக் கொள்கின்றனர். அண்மையில் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்திலிருந்து கிடைத்த தகவல் இதை உறுதிபடுத்தியது.
2008ம் ஆண்டு வரை, வேலை வாய்ப்பைப் பெற்ற திபெத் மகளிரின் எண்ணிக்கை 6 இலட்சத்து 92 ஆயிரமாகும். இது திபெத்தில் வேலை வாய்ப்பைப் பெற்ற மக்கள் தொகையில், 46.7 விழுக்காடாகும் என்று திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் உழைப்பு உத்தரவாதப் ஆணையகத்தின் புள்ளிவிபரம் சுட்டிக்காட்டியது.
|