சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதுடையோரிடையே எழுத்தறிவற்றவரின் எண்ணிக்கையை 2 விழுக்காட்டுக்குள் கட்டுப்படுத்த, திபெத் திட்டமிட்டுள்ளது. அண்மையில் லாசாவில் நடைபெற்ற திபெத் கல்விப்பணி கூட்டத்திலிருந்து இத்தகவல் கிடைத்தது.
உள்ளூர் கல்வி வாரியங்களின் புள்ளிவிபரங்களின் படி, 2008ம் ஆண்டு, திபெத்தில், இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதுடையோரிடையே எழுத்தறிவின்மை விகிதம், 5 ஆண்டுகளுக்கு முந்திய 30.9 விழுகாட்டிலிருந்து 2.4 விழுக்காடாக குறைந்தது.
|