விவசாயிகள் மற்றும் ஆயர்களின் உற்பத்தி மற்றும் வாழ்க்கைச் சூழ் நிலைகளை மேம்படுத்துவது, திபெத் தன்னாட்சிப் பிரதேச அரசின் முதன்மை கடமையாகும் என்று, சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைவர் சியாங்பா பன்சொக் தெரிவித்தார்.
திபெத்தின் பாய்ச்சல் வளர்ச்சி மற்றும் நீண்டகால பாதுகாப்பு முன்னேற்றப் போக்கில், சோஷியலிச புதிய கிராமப்புறக் கட்டுமானத்தை வலுப்படுத்தி, விவசாயிகள் மற்றும் ஆயர்களின் உற்பத்தி மற்றும் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்தி, அவர்களின் வருமானத்தை அதிகரிக்க முயற்சி செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
1978ம் ஆண்டு முதல் இதுவரை, திபெத்தில், விவசாயிகள் மற்றும் ஆயர்களின் நபர்வாரி வருமானம், ஆண்டுதோறும் 10 விழுக்காட்டுக்கு மேல் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
|