கடந்த சில நாட்களில், சீனாவின் பொருளாதார முன்னேற்ற நடவடிக்கைகளை வெளிநாட்டுச் செய்திஊடகங்கள், உயர்வாக பாராட்டின. சீனத் தேசிய மக்கள் பேரவை மற்றும் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு வெளியிட்ட சீன பொருளாதாரத்தின் நிலைமையில் இந்த செய்திஊடகங்கள் மிகுந்த கவனம் செலுத்தின.
சீன பொருளாதாரம் மீட்சி அடைந்து வருகிறது என்று REUTER செய்தி நிறுவனம் தெரிவித்தது.
சர்வதேச நிதி நெருக்கடியை சமாளிக்க, சீனா மேற்கொண்ட நடவடிக்கைகள், பலன்களை பெற்ற போதிலும், கடும் அறைகூவல்களை தொடர்ந்து எதிர்நோக்குகின்றது என்று க்யோடோ செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றும் திட்டத்தில், 4 இலட்சம் கோடி யுவான் பயன்பாட்டை, சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் தலைவர் சாங் பிங் தெரிவித்தார். நீண்டகால குறிக்கோள், தற்போதைய சிரமங்களுடன் தொடர்பு கொள்வது உள் நாட்டுத் தேவையை விரிவாக்குவது, மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துவதுடன் தொடர்பு கொள்வது, ஆகியவை சீன அரசின் அடிப்படை கண்ணோட்டத்தில் காணப்படுகிறது என்று சிங்கப்பூரின் லியன் ஹோ ஷா பாவ் 7ம் நாள் வெளியிட்ட கட்டுரை கூறியது.
|