லாசாவின் பொருளாதாரம் நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்ட போதிலும், இந்த பாதிப்பு பெரியளவில் இல்லை. 2008ம் ஆண்டில் லாசாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 10.1 விழுக்காட்டுக்கு மேலாகும் என்று சீன மக்கள் பேரவைப் பிரதிநிதியும், லாசா நகரின் தலைவருமான Duojicizhu அண்மையில் தெரிவித்தார். பெய்ஜிங்கில் சீன மக்கள் பேரவையின் ஆண்டுக் கூட்டத்தொடரில் கலந்து கொள்கின்ற அவர் ஒரு பேட்டியில் இவ்வாறு கூறினார்.
நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்ட போதிலும், லாசாவின் பொருளாதார வளர்ச்சி மாறாது. கடந்த 50 ஆண்டுகளிலான லாசாவின் முன்னேற்றங்கள், உறுதியான வளர்ச்சி அடிப்படையை உருவாக்கி, குறிப்பிடத்தக்க இடர்ப்பாட்டு எதிர்ப்பு ஆற்றலை தந்துள்ளன என்று Duojicizhu கூறினார்.
|