நடுத்தர மற்றும் சிறிய தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை உத்தரவாதம் செய்வதற்காக, சீனா சில சட்டங்களை வகுத்துள்ளது என்று சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் சட்ட அமைப்புப் பணிக் குழுவின் துணைத் தலைவர் ஆன்சியன் 9ம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.
நடுத்தர மற்றும் சிறிய தொழில் நிறுவனங்களை முன்னேற்றும் சட்டம், வணிக வங்கி பற்றிய சட்டம், வங்கித் துறைக்கான கண்காணிப்புச் சட்டம் முதலியவற்றில், நடுத்தர மற்றும் சிறிய தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை ஆதரிப்பது தொடர்புடைய விதிமுறைகள் இடம்பெறுகின்றன என்று அவர் செய்தியாளருக்குப் பேட்டியளிக்கும் போது சுட்டிக்காட்டினார்.
|