அண்மையில், சீனாவின் வட பகுதியில் யாங் லெலூஜின் வட்டம் உள்ளிட்ட 93 குறுநகரங்கள் மற்றும் கிராமங்கள், சீனாவில் புகழ் பெற்ற பண்டைக்கால குறு நகரங்கள் மற்றும் கிராமங்களின் பெயர்ப் பட்டியலில் சேர்க்கப்பட்டன. தற்போது, சீனாவின் தேசிய பண்டைக்கால குறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களின் எண்ணிக்கை, 251 ஆகும்.

சீனா முழுவதிலும் இத்தகைய குறுநகரங்கள் மற்றும் கிராமப்புறங்கள் காணப்படுகின்றன. புகழ் பெற்ற, வரலாற்று பண்பாட்டு குறுநகரங்கள் மற்றும் கிராமங்களுக்கான பாதுகாப்பு அமைப்புமுறை அடிப்படையில் உருவாகியுள்ளது. நவீன சமூகம் விரைவாக வளர்கின்ற போக்கில், பாரம்பரிய கிராமங்களை பாதுகாப்பதில், சீன சமூகத்தின் பல்வேறு துறையினர்கள் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர்.

சீனாவின் வட பகுதியிலுள்ள தியன் சின் மாநகரின் யாங் லெலூஜின் வட்டத்தின் நாள்காட்டி ஓவியங்கள், உலகில் புகழ் பெற்றவை. சீனாவின் பாரம்பரிய வழக்கத்தின் படி, புத்தாண்டை வரவேற்பதில் இவை இன்றியமையாத அலங்காரங்களாக விளங்குகின்றன. தவிர, நாள்காட்டி ஓவியம், அரசு சாரா நடைமுறையாகவும், சீனாவின் பாரம்பரிய பண்பாடாகவும் இருக்கின்றது.

யாங் லெலூஜின் மாவட்டத்தின் மர நாள்காட்டி ஓவியம், ஏறக்குறைய 400 ஆண்டுகால வரவாறுடையது. சீனாவின் வட பகுதியைச் சேர்ந்த நாள்காட்டி ஓவியத்தின் பிரதிநிதியாக இது விளங்குகிறது. சீனாவின் பல்வேறு பிரதேசங்களின் நாள்காட்டி ஓவியங்களுக்கு ஆழ்ந்த செல்வாக்கை இந்த யாங் லெலூஜின் நாள்காட்டி ஓவியம் கொண்டு வருகின்றது. மேலும், அங்குள்ள பட்டம் விடுதல், கல் சிற்பம் முதலிய அரசு சாரா கலைகள் மிகவும் ஈர்ப்புத்தன்மையுடையவை. பண்டைக்காலக் கட்டிடங்கடள், வீதிகள் மற்றும் வீடுகள், இந்த மாவட்டத்தின் முக்கிய அம்சங்களாகும்.

நண்பர்களே, சீனாவின் பண்டைக்கால ஊர்கள் மற்றும் கிராமப்புறங்கள் என்ற தகவலை அறிந்த பின், உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இந்தத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.
|