கடந்த ஆண்டு, புதிதாக வெளியிடப்பட்ட உழைப்பு ஒப்பந்த சட்டத்தின் நடைமுறையாயை சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டி சோதனை செய்தது. அதன்படி, சீனாவில் பெருமளவிலான தொழில் நிறுவனங்களின் உழைப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவது 93 விழுக்காட்டை எட்டியுள்ளது என்று சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் தலைவர் வூ பாங்கோ 9ம் நாள், சீனத் தேசிய மக்கள் பேரவையின் முறையான ஆண்டுக்கூட்டத்தில் வழங்கிய செயல் கூட்டப் பணி அறிக்கையில் தெரிவித்தார்.
உழைப்பு ஒப்பந்த சட்டம் செயல்படுத்தப்பட்ட பின், முழு சமூகத்தின் உழைப்பு ஒப்பந்தம் குறித்த கருத்து, பரவலாக உயர்ந்தது. உழைப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் விழுகாடும் தெளிவாக உயர்ந்தது. வேலைவாய்ப்பு மற்றும் மறு வேலைவாய்ப்பின் பணி அளவு மேலும் வலுப்பட்டது. தொழில் நிறுவனங்களின் தொழிலாளர்கள், குறிப்பாக நகரங்களில் வேலை செய்யும் விவசாயத் தொழிலாளர்களின் உரிமைகளும் நலன்களும் உத்தரவாதம் செய்யும் பணி, வலுப்பட்டது.
|