அரசு பணியறிக்கை மீதான மதிப்பீடு
cri
 11வது தேசிய மக்கள் பேரவையின் 2வது கூட்டத்தொடரின் தலைமை குழு, 9ம் நாள் மக்கள் மாகமண்டபத்தில் 2வது கூட்டத்தை நடத்தியது. அரசு பணியறிக்கை பற்றி, பல்வேறு பிரதிநிதிக் குழுகளும் வழங்கிய முன்மொழிவுகளை பரிசீலனை செய்ய இக்கூட்டம் முடிவெடுத்தது. மார்ச் 5 மற்றும் 6ம் நாட்களில், பல்வேறு பிரதிநிதி குழுகள், அரசின் பணியறிக்கையை பரிசீலனை செய்தன. பிரதிநிதிகள் அதனை வெகுவாக பாராட்டினர். கடந்த ஆண்டில் அரசவை மேற்கொண்ட பணிகளை முழுமையாக உறுதிப்படுத்தினர். பிரதிநிதிகளின் கருத்துக்களின் படி, சீன அரசவையின், பணியறிக்கையில் 17 திருத்தங்களை மேற்கொண்டது.
|
|