• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-09 09:39:46    
விவசாயத் தொழிலாளரின் வேலையின்மை பிரச்சினை

cri

விவசாயத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பிய போக்கு சீன பொருளாதார சமூகத்திற்கு எந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனா எவ்வாறு இதை கையாள்கின்றது. இவையனைத்தும் இப்போது பெய்ஜிங்கில் நடைபெறுகின்ற தேசிய மக்கள் பேரவையின் ஆண்டு கூட்டத் தொடரில் பிரதிநிதிகள் மிகவும் கவனம் செலுத்தும் பிரச்சினைகளில் ஒன்றாகும். தேசிய பேரவையின் பிரதிநிதியும் சீன சமூக அறிவியல் கழகத்தின் மக்கள் தொகை மற்றும் உழைப்புப் பொருளாதார ஆய்வு துறையின் தலைவருமான சை பாஃன் இந்த பிரச்சினை தீர்க்கா விட்டால் சீனப் பொருளாதார சமூகத்திற்கு கவனிக்க வேண்டிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறினார். இது பற்றி அவர் மேலும் கூறியதாவது.

கடந்த பல ஆண்டுகளில் விவசாயிகளின் வருமான அதிகரிப்பில் முக்கிய பகுதி வேளூரில் சம்பாதித்ததாகும். வேலை இழந்ததால் அவர்களின் வருமான அதிகரிப்பு வேகமும் பெரிதும் குறையும். தவிரவும், விவசாயத் தொழிலாளர்களில் 60 விழுக்காட்டினர் 30 வயதுகுட்ப்பட்டவர். அவர்கள் வேறு இடங்களுக்கு செலும் சாத்தியக் கூறு அதிகம். வேலையின்மை பிரச்சினையை உரிந்த முறையில் தீர்க்காவிட்டால் சமூகத்துக்கு அமைதியின்மை காரணம் ஏற்படும் என்று அவர் கூறினார். இந்த பிரச்சினையை சீன அரசு ஏற்கனவே கண்டறிந்ததோடு இதை கையாள பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இவ்வாண்டு வெளியிடப்பட்ட முதலாவது இலக்க ஆவணத்தில் கிராமப்புறங்களில் உழைப்பாளர்கள் வேலை பெறுவதை விரிவாக்குவது பற்றி முதன்முதலாக ஒட்டுமொத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சீனத் தலைமை அமைச்சர் வென்சியாபாவ் மார்ச் 5ம் நாள் வழங்கிய அரசுப் பணியறிக்கையில் விவசாயத் தொழிலாளர்கள் தம் ஊருக்கு திரும்பிய பிரச்சினை எவ்வாறு தீர்ப்பது பற்றி தெளிவான மனபான்மை வெளிபடுத்தினார். இது பற்றி அவர் கூறியதாவது.

விவசாயத் தொழிலாளர்களுக்கு உகந்த தொழில்களை விரிவாக்க வேண்டும். ஏற்கனவேயுள்ள தொழில் பதவிகளை உறுதிப்படுத்த வேண்டும். அரசின் ஒதுக்கீடு மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளின் கட்டுமானத்தின் மூலம் விவசாயத் தொழிலாளர்கள் வேலை பெறுவதை தூண்ட வேண்டும். இன்னலுள்ள தொழில் நிறுவனங்கள் தொழிலாளர்களுடன் சம்பவம் பெறுவதை கலந்தாய்வு செய்வது, வளைந்து கொடுக்கும் முறையில் தொழிலாளர்களை அமர்ப்பது, தொழில் நுட்பப் பயிற்சி அளிப்பது முதலிய வழிமுறைகளின் மூலம் பணியாளர்களை குறைக்காமல் இருப்பதை ஊக்குவிக்க வேண்டும். கிராமப்புறங்களிலான பொது சாதனங்களின் கட்டுமானத்தில் ஈடுபட ஊருக்கு திரும்பிய விவசாயத் தொழிலாளர்களை அணித்திரட்ட வேண்டும் என்று வென்சியாபாவு முன்மொழிந்தார். ஷாங்காய் மாநகரிலிருந்து வந்த விவசாயத் தொழிலாளர் பிரதிநிதி ஜுசியேசிங் குழு பரிசீலணையில் கருத்து தெரித்தார். அவர் கூறியதாவது.

அரசின் உதவி, தொழில் நிறுவனங்களின் கவனம் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் முயற்சியை இணைப்பதன் மூலம் நாம் தொழில் நுட்ப திறமைசாலியாக வளர்வோம் என்று அவர் கூறினார். சீனத் தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதியும் தென்மேற்கு நிதி பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான யீ மின் லி மேலும் ஆழந்த துறையிலிருந்து பிரச்சினையை கருத்தில் கொள்கிறார். நடுத்தர மற்றும் சிறிய நகரங்களை வளர்ப்பதன் மூலம் விவசாயத் தொழிலாளர்கள் தாம் வாழ்கிற இடத்திற்கு அருகிலுள்ள இத்தகைய நகரங்களில் வேலை செய்யத் துணைபுரிய வேண்டும் என்று அவர் முன்மொழிந்தார்.

சீனத் தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதியும் சிச்சுவான் மாநில மேலாளருமான சியாங் ச்சியூ பஃன் குழுக் கூட்டத்தில் இப்பிரச்சினை பற்றி கருத்து தெரிவித்தார். சில தொழிற்துறைகள் கிழக்கிலிருந்து மத்திய மற்றும் மேற்கிற்கு நகருக்கு நகரலாம். இந்த இடமாடம் விவசாயத் தொழிலாளர்கள் ஊருக்கு திரும்பிய வழியுடன் இணைந்தால் அவர்கள் மீண்டும் வேலை பெறுவதிலான இன்னல்கள் தீர்க்கப்படும். அதேவேளையில் மத்திய மற்றும் மேற்கு பகுதிகளின் பொருளாதாரத்தின் வளர்ச்சி மேலும் உயர்வதற்கு துணை புரியும் என்று அவர் கூறினார். நேயர்கள் இதுவரை விவசாயத் தொழிலாளரின் வேலையின்மை பிரச்சினையின் தீர்வு பற்றிய விவாதம் என்னும் செய்தித் தொகுப்பைக் கேட்டீர்கள்.