பொருளாதார அதிகரிப்பை முன்னேற்ற கடந்த ஆண்டு சீன அரசு 4 இலட்சம் கோடி யுவான் மதிப்புள்ள ஊக்குவிப்புத் திட்டத்தை வெளியிட்டது. இந்த நிதியின் பயன்பாடு மீதான கண்காணிப்பை தேசிய மக்கள் பேரவை வலுப்படுத்தும் என்று சீன தேசிய மக்கள் பேரவையின் நிதிப் பொருளாதார கமிட்டியின் துணைத் தலைவரான பிரதிநிதி கௌ சியாங் தெரிவித்தார். 9ம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த ஒதுக்கீட்டை அதிகரிப்பது மக்கள் கவனம் செலுத்தும் பிரச்சினையாகும். 4 இலட்சம் கோடி யவான் மதிப்பான நிதியின் பயன்பாட்டுக் கண்காணிப்பு, தேசிய மக்கள் பேரவையின் கண்காணிப்பில் ஒரு முக்கிய பகுதியாகும். இந்த கண்காணிப்பு மையம் அரசின் முதலீட்டுத் துறையில் வைக்கப்படும் என்றார் அவர்.
|