திபெத்தின் எல்லை பிரதேசத்தில், கடத்தல், போதைப் பொருள் மற்றும் துப்பாக்கி வர்த்தகம், நாட்டின் இறையாண்மை மற்றும் அரசியலுக்குக் கேடு விளைவிக்கும் குற்ற நடவடிக்கைகள் அனைத்தையும், சீனா தொடர்ந்து ஒடுக்கி வருகிறது என்று சீனப் பொது பாதுகாப்பு அமைச்சகத்தின் எல்லை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பு ஹோங்யூ 9ம் நாள் தெரிவித்தார்.
சீனாவின் எல்லை பாதுகாப்புப்படை, திபெத் எல்லை பிரதேசத்திலுள்ள நுழைவாயில், முக்கிய வழிப்பாதைகள் ஆகியவற்றில் தனது படைப்பிரிவுகளைப் பரவல் செய்து பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளது. எல்லை பிரதேச நிலைமையின் மாற்றங்களை நெருக்கமாக கவனித்து, அதன் நிதானத்தைப் பேணிக்காக்க முழு மூச்சுடன் முயற்சி செய்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
|