20வது நூற்றாண்டின் 80ம் ஆண்டுகளின் இடைக்காலம் முதல் இது வரை, திபெத்தில் விலங்கு மற்றும் தாவர வகைகளின் எண்ணிக்கை சீரான வளர்ச்சியை நிலைநிறுத்தி வருந்துள்ளது. சில விலங்குகள் மற்றும் தாவரங்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்தும் உள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த அமெரிக்காவின் நிபுணர்கள் Daniel Taylouஉம் Robert Flemingஉம் அண்மையில் செய்தியாளருக்குப் பேட்டி அளித்த போது இவ்வாறு தெரிவித்தனர்.
தற்போது, உலகில் சிறந்த இயற்கை பாதுகாப்பு மண்டலங்களில், திபெத் ஒன்று எனறு அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
திபெத்-பல்வகை உயிரினங்கள் மற்றும் இயற்கை பாதுகாப்பு இலட்சியம் என்ற நூல், அமெரிக்க மற்றும் சீன நூலாசிரியர்களால் கூட்டாக இயற்றப்பட்டது. ஆங்கிலம், திபெத் மற்றும் சீன மொழிகளில் இந்த நூல் அண்மையில் வெளியிடப்பட்டது. திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் பல்வேறு நிலை அரசுகள் பல்வகை உயிரினங்களை பாதுகாப்பதில் மாபெரும் பங்காற்றியதால், இத்துறையில் பல முன்னேற்றங்கள் பெறப்பட்டன.
|