• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-09 10:40:05    
சட்டமியற்றல் பணி

cri

2008ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சட்டமியற்றல் பணியில், சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டி, அறிவியல் மற்றும் ஜனநாயக முறையில் சட்டமியற்றல் பணியை முன்னேற்றுவதோடு, பொது மக்கள் சட்டமியற்றல் பணியில் பங்கெடுப்பதையும் விரிவாக்கியது.

சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் தலைவர் வூ பாங்கோ, மக்கள் பேரவையின் பிரதிநிதிகளுக்கு, நிரந்தர கமிட்டியின் பணி குறித்து 9ம் நாள் அறிக்கையிட்ட போது, இவ்வாறு தெரிவித்தார்.

நடப்பு நிரந்தர கமிட்டியின் தலைவர் கூட்டத்தின் முடிவுக்கு இணங்க, நிரந்தர கமிட்டி பரிசீலித்த சட்ட வரைவுகள் அனைத்தும், சீனத் தேசிய மக்கள் பேரவையின் இணையத்தில் அறிவிக்கப்படுகின்றன. மேலும், முக்கிய சட்ட வரைவுகள், சீனாவின் அதிகாரபூர்வ செய்தி ஊடகங்களில் வெளியிடப்பட்டு, விரிவான முறையில் கருத்துக்கள் கேட்கப்படுகிறது என்று வூ பாங்கோ கூறினார். தவிர, சட்ட வரைவுகளில் குறிப்பிடப்படும் முக்கிய பிரச்சினைகள் குறித்து, சட்டமியற்றல் வாரியங்கள் ஆழமான முறையில் கள ஆய்வு செய்யும். அத்துடன், சட்ட வரைவுகளை மேம்படுத்தும் வகையில், கலந்துரையாடல்கள் மற்றும் விவாத்தங்கள் மூலம், தொடர்புடைய வட்டாரங்களுடன் தொடர்பு கொண்டு தீர்வு முறைகள் குறித்து, கூட்டாக ஆராய்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.