• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-09 15:05:53    
சீனாவின் மனித மைய சட்டவிதிகள்

cri
கடந்த ஓராண்டில், சீன தேசிய மக்கள் பேரவையும் அதன் நிரந்தர கமிட்டியும் பரிசீலனை செய்து, ஏற்றுக்கொண்ட 9 சட்டவிதிகள் மக்களின் பல வாழ்க்கைப் பிரச்சனைகளுடன் தொடர்புடையவை. பெய்சிங்கில் நடைபெற்று வருகின்ற சீன தேசிய பேரவையின் ஆண்டுக் கூட்டத்தொடரில், இப்பேரவையின் நிரந்தர கமிட்டியின் தலைவர் வூ பாங்கோ இதை மீண்டும் வலியுறுத்தினார். அவர் கூறியதாவது

மனித முதன்மை என்ற கோட்பாட்டில் ஊன்றி நின்று, மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கான தீர்வை விரைவுப்படுத்துவது, நிரந்தர கமிட்டியின் முக்கிய பகுதியாகும். எனவே, சட்டமியற்றல் மற்றும் கண்காணிப்பை இணைப்பதன் மூலம், தொடர்புடைய சட்டவிதிகளை வகுத்து, முழுமைப்படுத்த வேண்டும். சட்ட நடைமுறையாக்கம், பரிசோதனை மற்றும் கண்காணிப்பை வலுப்படுத்தும் வேளையில், சீன தேசிய மக்கள் பேரவையின் பணியை மக்களின் வாழ்க்கையுடன் மேலும் இணைக்க வேண்டும் என்று, வூ பாங்கோ தெரிவித்தார்.

சீன தனித்தன்மை வாய்ந்த சோஷலிச சட்ட அமைப்புமுறையை 2010ம் ஆண்டுக்குள் உருவாக்குவதென, சீன திட்டமிட்டுள்ளது. இதன் படி, மக்களின் வாழ்க்கையுடன் தொடர்புடைய சட்டவிதிகள் வகுக்கப்படுவதை, சீன தேசிய மக்கள் பேரவை கடந்த ஓராண்டில் விரைவுப்படுத்தியது. சீன சமூக அறிவியல் கழகத்தின் சட்டயியல் நிபுணர் மோ ஜிஹோங் இப்பணியை உயர்வாக பாராட்டினார். அவர் கூறியதாவது

சட்டமியற்றும் போது, மக்களின் வாழ்க்கை மேம்பாடு குறித்த சட்டவிதிகள் சிறப்பாக கருத்தில் கொள்ளப்பட்டன. சட்டமியற்றல் என்ற வழிமுறையில், அரசின் பொறுப்பும் சமூகப் பொறுப்பும் வலுப்படுத்தப்பட்டுள்ளன. இதனால்,உடல் சவாலுடையோர் காப்புறுதி சட்டம், உணவுப் பொருட்கள் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட முக்கிய சட்டங்களை கடந்த ஆண்டில் வகுக்கப்பட்டன என்றார் அவர்.

கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமூகக் காப்புறுதி ஆகியவை, மக்கள் அனைவரும் கவனம் செலுத்திய பிரச்சினைகளாகும். நிதி நெருக்கடி உலகளவில் விரிவாகும் போது, இப்பிரச்சினைகள் பற்றிய மக்களின் வேண்டுகோள் மேலும் தெளிவாகவும் உறுதியாகவும் மாறி வருகிறது.

இது குறித்து, தொடர்புடைய சட்டவிதிகளின் பிரிவுகள் மற்றும் திருத்தங்களை மேற்கூறிய நிரந்தர கமிட்டி விரைவுப்படுத்தும் வேளையில், 2008ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த உழைப்பு ஒப்பந்த சட்டம் மீதான பரிசோதனையையும் வலுப்படுத்தியது.

உழைப்பு ஒப்பந்த சட்டம், பல பத்துகோடி உழைப்பாளர்களின் நலன்கள் மற்றும் உரிமைகளுடன் தொடர்புடைய சட்டமாகும். உழைப்பாளர்களின் உரிமையை பேணிக்காக்கும் வேளையில், தொழில் நிறுவனங்களின் செயல்களை வரையறைப்படுத்தி, இரு தரப்புகளிடை நம்பிக்கையின்மையை நீக்குவது, இச்சட்டத்தினால் ஏற்படும் நன்மையாகும் என்று,WIA என்னும் சீன வெளிநாட்டு கூட்டு முதலீட்டு தொழில் நிறுவனத்தின் உழைப்பாளர் விவகார பிரிவின் தலைவர் வாங் யாயுங் தெரிவி்த்தார். அவர் மேலும் கூறியதாவது

சட்ட நடைமுறை கோணத்தில், உழைப்பு ஒப்பந்த சட்டத்தின் நடைமுறையாக்கம் கூட்டு வெற்றிகளை பெறும். பணியாளர்களும் தொழில் நிறுவனங்களும் இதில் பயனடைவர். ஒரு தரப்பு மட்டுமல்ல என்று, வாங் யாயுங் குறிப்பிட்டார்.

தவிர, உணவுப் பொருட்கள் பாதுகாப்பு சட்டமும், மக்களின் வாழ்க்கையுடன் நெருக்கமாக தொடர்புடையது. சன்லூ பால்மாவு சம்பவம் உள்ளிட்ட முக்கிய உணவு பாதுகாப்பு குறித்த நிகழ்ச்சிகள் கடந்த ஆண்டில் ஏற்பட்டன. எனவே, சீன தேசிய மக்கள் பேரைவையின் நிரந்தர கமிட்டி சமூகத்தின் முன்மொழிவுகளை கேட்டறிந்த பின், இச்சட்டத்தின் வரைவுத் தீர்மானத்தை மேலும் திருத்தியது.

இவ்வாண்டில், சமூகத் துறையை பெரிதும் வலுப்படுத்தி, பொருளாதாரம், அரசியல் மற்றும் பண்பாட்டுத் துறைகளில் சட்டவிதிகளை தொடர்ந்து முழுமைப்படுத்த, தேசிய மக்கள் பேரவை பாடுபடும். சமூகக் காப்புறுதி சட்டம், சமூக மீட்புதவி சட்டம், உரிமை மீறலுக்கான பொறுப்புச் சட்டம், தேசிய ஈடுச் சட்டம் முதலிய மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுடன் தொடர்புடைய சட்டவிதிகள் நிகழ்ச்சி நிரலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று தெரிய வருகிறது.