9ம் நாள், சீன தலைமை அமைச்சர் வென் ச்சியா பாவ், சே ச்சியாங் மாநில பிரதிநிதிக் குழுவின், அரசின் பணியறிக்கை பற்றிய பரிசீலணையில் கலந்துகொண்டார். அரசு சாரா பொருளாதாரம் சமமான சந்தை போட்டிச் சூழலை அனுபவிக்க வழிசெய்ய வேண்டும் என்று வென் ச்சியா பாவ் வலியுறுத்தினார்.
அரசு சாரா பொருளாதாரம், சீன சோஷியலிச சந்தையின் பொருளாதாரத்தின் முக்கிய பகுதியாகும். சர்வதேச நிதி நெருக்கடியை சமாளிப்பதில், அரசு சாரா பொருளாதாரத்தின் முக்கிய பங்கை அலட்சியம் செய்ய கூடாது. பல்வேறு வகையான அமைப்பு முறையின் தடைகளை நீக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
|