திபெத் முன்னேற்ற பணி குறித்து சீன அரசு மேற்கொண்ட சில கொள்கைகளை திபெத் இனத் தன்னாட்சிப் பிரதேசம் நடைமுறைப்படுத்த வேண்டும். வளர்ச்சியையும் நிதானத்தையும் முன்னேற்ற வேண்டும். சமூக மற்றும் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கும், பல்வேறு இன மக்களின் வாழக்கைக்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டும். 9ம் நாள் சீன அரசுத் தலைவர் ஹூ ச்சின் தாவ், திபெத் இனப் பிரதிநிதிக் குழுவின் பரிசீலணை கூட்டத்தில் கலந்துகொண்ட போது இவ்வாறு தெரிவித்தார்.
சீன மற்றும் திபெத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த வளர்ச்சிப் பாதையில் திபெத் இனத் தன்னாட்சிப் பிரதேசம் ஊன்றி நிற்க வேண்டும். பிரிவினையை எதிர்த்து, சீனாவின் ஒன்றிணைப்பை பேணிக்காக்க வேண்டும் என்று ஹூ ச்சின் தாவ் தெரிவித்தார்.
|