சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி, இன்றைய சீனாவின் எதிர்காலத்தை முக்கியமாகத் தீர்மானிக்கிறது. அதே வேளையில், அது, தற்போதைய சர்வதேச நிதி நெருக்கடியைச் சமாளிக்கும் சீனாவின் வவிமையான ஆயுதமுமாகும. இன்னலில் உள்ள காலத்தில், சீனா சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணியில் அசையாமல் நிற்க வேண்டும் என்று சீனத் தலைமையமைச்சர் வென்சியாபாவ் 10ம் நாள் கூறினார்.
நாட்டை நிர்வகிக்கும் பல்வேறு துறைகளுடன் சீர்திருத்தப் புத்தாக்க எழுச்சி இணைக்கப்பட வேண்டும். சீனாவின் நாட்டு நிலைமைக்குப் பொருந்திய வளர்ச்சிப் பாதை மற்றும் வளர்ச்சி மாதிரியை இடைவிடாமல் மேம்படுத்த வேண்டும். சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி என்ற அடிப்படைக் கொள்கையில் ஊன்றி நின்று, திறப்பை விரிவாக்குவதன் மூலம், சர்வதேசப் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் போட்டியில் புதிய மேம்பாட்டை உருவாக்க வேண்டும் என்று வென்சியாபாவ் கூறினார்.
|