ஷாங்காய் உலகப் பொருட்காட்சி, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுக்குப் பின், சீனாவின் அரசு சாரா தூதாண்மையைச் சேர்ந்த ஒரு நிகழ்வாகும் என்று சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் வெளிவிவகாரக் குழுவின் உறுப்பினரும், தோங்சி பல்கலைக்கழகத்தின் சர்வதேசப் பண்பாட்டுப் பரிமாற்றக் கழகத்தின் தலைவருமான சேச்சியன்குயொ 10ம் நாள் பெய்ஜிங்கள் தெரிவித்தார்.
ஷாங்காய் உலகப் பொருட்காட்சி, 2010ம் ஆண்டு மே முதல் நாள் தொடக்கம் அக்டோபர் 31ம் நாள் வரை நடைபெறும். நகர வாழ்க்கையை மேலும் சிறப்பாக மாற்றுவது என்பது அதன் தலைப்பாகும். இது வரை, 231 நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் இதில் கலந்து கொள்வதை உறுதி செய்துள்ளன.
|