• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-10 14:34:49    
சீனாவின் சமூகக் காப்புறுதி

cri

85 ஆயிரம் கோடி யுவான் மதிப்புள்ள மருத்துவ சிகிச்சையின் சீர்திருத்த ஒதுக்கீடு, சீனாவின் சுமார் 10 விழுக்காட்டு நகர்கள் மற்றும் மாவட்டங்களில் கிராமப்புற முதுமைக் கால காப்புறுதி முதலியவை, மக்களின் சமூகக் காப்புறுதியில் சீன அரசு மிகுந்த கவனம் செலுத்துவதை எடுத்துக்காட்டுகின்றன. இவற்றால், மேலதிகமான நலன்களை பொது மக்கள் பெறுவர். அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவைப் பொறுத்தவரை, மக்களின் சமூகக் காப்புறுதிப் பணிகளை செவ்வனே செய்வது, ஆட்சிப்பொறுப்பாளர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.


சீன பொருளாதாரத்தின் வளர்ச்சி, தாழ்ந்த நிலையில் இருக்கின்றது. தற்போது, நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களுக்கு இடையிலான இடைவெளியும், பல்வேறு பிரதேசங்களுக்கிடையில் இடைவெளியும் அதிகரித்துள்ளன. குறுகிய காலத்தில், சமூகக் காப்புறுதி அமைப்புமுறை உருவாகியுள்ளது. இந்த அமைப்புமுறையில் சேர்கின்ற மக்களின் எண்ணிக்கையும் குறைவு. மேலும், சமூகப் பொருளாதாரம் வளர்வதோடு, புதிய பிரச்சினைகளும் அறைகூவல்களும் தொடர்ந்து உருவாகி கூர்மையாகி வருகின்றன.


எடுத்துக்காட்டாக, சர்வதேச நடைமுறை வரையறையின்படி, சீனாவில் 60 வயதிற்கு மேலான மக்கள் தொகை விகிதம் 10 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது. முதியோர் அதிக எண்ணிக்கையில் இருக்கின்ற நாடாக சீனா இருப்பதை இது காட்டுகின்றது. முதுமைக் கால காப்புறுதி மற்றும் மருத்துவ சிகிச்சையின் செலவுகள் மேலும் அதிகரித்து வருகின்றன.மேலும், நகரங்களுக்கு இடம்பெயர்ந்து, பணிபுரியும் விவசாயிகளுடன் தொடர்புடைய பிரச்சினைகளும் உயர்ந்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில், சீனாவின் முக்கிய நிறுவனங்களின் கள ஆய்வு படி, சமூக காப்புறுதி, சீன மக்கள் கவனம் செலுத்தும் பல பிரச்சினைகளில் ஒன்றாகும். எனவே, சமூகக் காப்புறுதி பிரச்சினையை தீர்ப்பது அவசர தேவையாகியுள்ளது.


அண்மையில், சமூக காப்புறுதியை மேம்படுத்தும் வகையில், பயன் தரும் முயற்சிகளை சீன அரசு இடைவிடாமல் மேற்கொண்டு வருகிறது. நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் மிக குறைந்த வருமானம் பெறுவோருக்கான வாழ்க்கை மானியம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏறக்குறைய 20 கோடி மக்கள், முதுமைக் கால காப்புறுதி அமைப்புமுறையில் சேர்ந்துள்ளனர். இதன் மூலம், பொது மக்கள் பலவித நலன்களைப் பெறுகின்றனர். மேலும், மனித முதன்மை என்னும் சீன அரசின் ஆட்சிக் கண்ணோட்டமும் வெளிப்படுகின்றது. பொறுப்பான மனப்பான்மையோடு, மக்களுக்கு சேவைகளை வழங்க வேண்டும் என்று சீன தலைமையமைச்சர் வென் சியா பாவ் தெரிவித்தார்.


தற்போது, உலக நிதி நெருக்கடி மற்றும் வேலைவாய்ப்புகள் மோசமாகியுள்ள நிலைமையில், சமூகக் காப்புறுதி அமைப்புமுறை, மிகுந்த கவனத்தை ஈர்த்து வருகின்றது. பெய்ஜிங்கில் நடைபெறுகின்ற சீனத் தேசிய மக்கள் பேரவை மற்றும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் கூட்டத்தொடர்களில், இந்தப் பிரச்சினை முக்கியமாக விவாதிக்கப்பட்டுள்ளது. அண்மையில், உலகளவில் இணையத்தைப் பயன்படுத்துவோருடன், சீனத் தலைமையமைச்சர் வென் சியா பாவ், நேரடி இணையத் தொடர்பு மூலம் கருத்துக்களைப் பரிமாறினார். மருத்துவ சிகிச்சை, கல்வி, வேலைவாய்ப்பு, உறைவிடம் ஆகிய பிரச்சினைகள் இதில் அடங்குகின்றன. இந்தக் கூட்டத்தொடர்கள் நடைபெற்ற போது, சமூகக் காப்புறுதி குறித்து, பிரதிநிதிகளும், உறுப்பினர்களும் முன்மொழிவுகளை வழங்கினர்.
இன்னல்கள் பல இருந்தாலும், மக்களுடன் தொடர்புடைய பிரச்சினைகளில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாண்டு, இந்த பிரச்சினையை எதிர்நோக்கி, சீன மக்கள் பேரவையின் போது, சீன அரசு குறிப்பிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சமூகக் காப்புறுதிக்கான நிதி தொகை, 29 ஆயிரத்து 300 கோடி யுவானாக அதிகரிக்கவுள்ளது. இந்த அமைப்புமுறையின் அளவு மேலும் விரிவாக்கப்பட்டு, அதன் உத்தரவாத வரையறையை உயர்த்தி, புதிய மருத்துவ சிகிச்சையின் சீர்திருத்த திட்டம் வெகுவிரைவில் வெளிப்படுத்தப்படும். அதேவேளையில், மருத்துவ செலவு பெருமளவில் குறையும். கிராமப்புறங்களில் முதுமைக் கால காப்புறுதி அமைப்புமுறை விரைவில் துவங்கும். மக்களின் வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்புள்ள முழுமையான சமூகக் காப்புறுதி அமைப்புமுறையை சீனா உருவாக்கும்.