க்ளீட்டஸ் – எங்களுடன் சேர்ந்து சுவையான சீன உணவு வகைகளின் தயாரிப்பை அறிந்துகொள்ள அழைக்கின்றோம். வாணி – க்ளீட்டஸ், கடந்த சில நிகழ்ச்சிகளில் இறைச்சி கலந்த சில உணவு வகைகள் பற்றி எடுத்து கூறினோம். இன்றைய நிகழ்ச்சியில் சைவ உணவு விரும்பும் நேயர்களுக்கு சிறப்பாக 2 சீன உணவு வகைகள் பற்றி எடுத்து கூறுகின்றோம்.
க்ளீட்டஸ் – நல்ல செய்தி தான். அவை தனிச்சிறப்புடைய உணவு வகைகளா? வாணி – ஆமாம். இந்திய மக்களின் உணவு மேசையில் கூறுகாய் வகைகள் பொதுவாகக் காணப்படுகின்றன. அப்படியா? க்ளீட்டஸ் – ஆமாம்.சிறியவர் முதல் பெரியவர் வரை, உணவருந்து போது ஊறுகாய் அருகிந்தால், மகிழ்ச்சியாக சாப்பிடுவதுண்டு. வாணி – இன்று சீனப் பாரம்பரிய வழிமுறை மூலம் நாங்களும் ஊறுகாய்களைத் தயாரிக்கின்றோம். சரி, முதலில் முள்ளங்கி ஊறுகாய் பற்றி எடுத்து கூறுகின்றோம். அதன் சீனப் பெயர் yan luo bo. க்ளீட்டஸ் – வீட்டுத் தயாரிப்பு என்றுமே மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. சரி தேவையான பொருட்கள் பற்றி கூறுங்கள். வாணி – முதலில், நடு தர அளவு வெள்ளை முள்ளங்கி ஒன்று உப்பு 15 கிராம் அவரை சாஸ் 30 கிராம் காடி ஒரு தேக்கரண்டி பூண்டு பல் 2 நல்லெண்ணெய் 2 தேக்கரண்டி சர்க்கரை 20 கிராம் அரிசி மது 2 தேக்கரண்டி தண்ணீர் ஒரு லிட்டர் வாணி – முதலில், வெள்ளை முள்ளங்கியை நன்றாக சுத்தம் செய்யுங்கள். பிறகு அதனை 0.5 சென்டி மீட்டர் அளவுடைய துண்டுகளாக நறுக்க வேண்டும். விசிறி போன்ற வடிவமாக அமைய ஒவ்வொரு துண்டையும் குறுக்கும் நெடுக்குமாக மேலும் 2 முறை நறுக்க வேண்டும். க்ளீட்டஸ் –முள்ளங்கி துண்டுகளையும் உப்பையும் கலந்து சுமார் 15 நிமிடம் அப்படியே வைக்கவும். பூண்டு பற்களை மிகவும் சிறிய அளவாக நறுக்கிக்கொள்ளுங்கள். வாணி – 15 நிமிடங்களுக்குப் பிறகு, கைகளால் முள்ளங்கி துண்டுகளை நன்றாக தேய்த்து பிசையுங்கள். இதிலிருந்து வெளியேறும் சாறு தேவையில்லை. பிறகு, அவற்றை ஒரு கிண்ணம் அல்லது குழிப் பாட்டிரத்தில் வைத்து, அதன் மேல் சுத்தம் செய்யப்பட்ட கற்கள் போன்ற அதிக எடையுடைய பொருளை வையுங்கள். சூரிய ஒளி இல்லாத இடத்தில் 8 மணி நேரம் அப்படியே வைக்கவும். க்ளீட்டஸ் – அவரை சாஸ், சர்க்கரை, அரிசி மது, காடி, நல்லெண்ணெய், பூண்டு, 150 மில்லி லிட்டர் தண்ணீர் ஆகியவற்றை நன்றாக கலந்து கிளறவும்.
வாணி – எஞ்சிய 850 தண்ணீரில் பதப்படுத்த நாம் தனியே வைத்திருந்த முள்ளங்கி துண்டுகளை போட்டு, நன்றாக தேய்த்து கிளறவும். பிறகு மேற்கூறிய வழிமுறை மூலம், அதன் மீது அதிக எடையுடைய பொருளை வையுங்கள். அவற்றிலிருந்து வெளியேறும் சாறு தேவையில்லை. க்ளீட்டஸ் – ஒரு மணி நேரத்துக்குப் பின், முள்ளங்கி துண்டுகளில் முன்பு தயாரிக்கப்பட்ட சாஸை ஊற்றவும். நன்றாக கலந்து கிளறவும். 2 நாட்களுக்குப் பின், முள்ளங்கி ஊறுகாய் தயார். வாணி – சில குறிப்புகள். புதிய வெள்ளை முள்ளங்கியைத் தேர்ந்தெடுக்கவும். அதன் தோலை நீக்க தேவையில்லை. இப்படி தயாரிக்கப்பட்ட முள்ளங்கி
ஊறுகாயை உட்கொண்ட போது, வெவ்வேறான பகுதியில் வெவ்வேறான சுவை கொண்டுள்ளது. மேலும், முள்ளங்கியை மிக மெல்லிய துண்டுகளாக நறுக்க கூடாது. க்ளீட்டஸ் – ஏன்?மெல்லிய துண்டுகள் என்றால் சுவைக்க எளிதாயிற்றே. வாணி – நீங்கள் சொன்னது சரி. ஆனால், மிகவும் மெல்லிய துண்டுகளாக இருந்தால், ஊறுகாயின் தன்மையை உருவாக்க முடியாது. மேலும், புதிய முள்ளங்கிக்கு தீவிர கார்ப்பு சுவை உண்டு. ஆகையால், முதலாவது தொகுதி சாற்றை நீக்கிய பின், அவற்றை மீண்டும் தண்ணீரில் சுத்தம் செய்து மேலும் ஒரு முறை ஊறவைக்க வேண்டும். கார்ப்பு சுவையை நீக்குவது அதன் நோக்கமாகும். க்ளீட்டஸ் – சரி, புரிகின்றது. மேலும், முள்ளங்கி ஊறுகாய் தயாரிக்கும் நேரம் இதர ஊறுகாய்களைத் தயாரிக்கும் நேரத்தை விட அதிகம். ஆனால், இப்படி தயாரிக்கப்பட்ட ஊறுகாயில் நல்ல சுவை கிடைக்கலாம். வாணி – நேயர்களே, இதே செய்முறையில் நீங்கள் வெள்ளரிக்காய் ஊறுகாயையும் தயாரிக்கலாம். அவரை சாஸுக்கு பதிலாக மிளகாய் தூளை பயன்படுத்தலாம். க்ளீட்டஸ் -- வெள்ளரிக்காய் ஊறுகாயைத் தயாரிக்கும் போது, வெள்ளரிக்காய் துண்டுகளை அதிக எடையுடைய பொருள் மூலம் சாறு வெறியேற செய்வதற்கு சுமார் ஒரு நாள் தேவை. இவ்வாறு ஒரு முறை செய்தால் போதும். வாணி – மறவாமல் மிகச் சிறிய அளவிலான வெள்ளரிக்காய்களைத் தேர்ந்தெடுக்கவும்.
|