சிக்கலான காலத்தில் சீனத் தொழில் துறை
cri
தற்போது, சீனத் தொழிற்துறை இயங்குவதில் ஆக்கப்பூர்வ அறிகுறிகள் காணப்படுகின்றன. இருந்த போதிலும், மிகவும் சிக்கலான காலத்தில் தான் உள்ளது. வீழ்ச்சியிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளதாகக் கூற முடியாது. இன்று பெய்ஜிங்கில் நடைபெற்ற சீனத் தேசிய மக்கள் பேரவையின் ஆண்டுக் கூட்டத் தொடரின் செய்தியாளர் கூட்டத்தில் சீனத் தொழில்துறை மற்றும் தகவல் மாமாக்க துறை அமைச்சர் லீ யீ சுங் இவ்வாறு தெரிவித்தார். சர்வதேச நிதி நெருக்கடியால், சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிலைமை கடுமையாக இருக்கின்றது. சீனாவில் ஒரு பகுதி தொழில்களின் உற்பத்தி ஆற்றல் தேவைக்கு அதிகமாகியுள்ளது. அவை இரண்டும் சீனத் தொழிற்துறை வளர்ச்சி எதிர்நோக்கும் முக்கிய அறைகூவல்களாகும் என்று லீ யீ சுங் சுட்டிக்காட்டினார்.
|
|