நாட்டின் பாதுகாப்பு மற்றும் படைகளுக்கான நவீனமயமாக்க கட்டுமானத்தைப் பெரிதும் முன்னேற்றி, நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் உரிமைப் பிரதேச ஒருமைப்பாட்டை உறுதியாகப் பேணிக்காக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சி மற்றும் சமூகப் பொது நிலைமையைப் பேணிக்காப்பதற்கு, வலிமையான ஆற்றல், ஆதரவு மற்றும் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், சீன அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஹூசிந்தாவ் 11ம் நாள் வலியுறுத்தினார்.
நாட்டின் பொருளாதாரக் கட்டுமானம் மற்றும் சமூக இலட்சிய வளர்ச்சியில் படைகள் ஆக்கப்பூர்வமாகக் கலந்து கொள்ள வேண்டும். பேரிடர் நீக்க எழுச்சியைப் பெரிதும் வெளிக்கொணர்ந்து, சிக்கனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் ஹூசிந்தாவ் சுட்டிக்காட்டினார்.
|