• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-11 15:40:30    
திபெத்தின் தலைகீழான மாற்றங்கள்

cri

மார்ச் 28ம் நாள், திபெத்தில் ஜனநாயக சீர்திருத்தம் நடைபெற்ற பொன்விழா நாளாகும். கடந்த 50 ஆண்டுகளாக, திபெத்தின் அரசியலிலும் பொருளாதாரத்திலும் தலைகீழான மாற்றங்கள் ஏற்பட்டன. திபெத் மக்கள், சுதந்திரமான, அமைதியான, இனிமையான புதிய வாழ்க்கையை வாழ்கின்றனர்.
Karma Rinchen என்பவர், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதியாக தற்போது இருக்கிறார். 50 ஆண்டுகளுக்கு முன், அவரது பெற்றோர், பண்ணை அடிமைகளாக இருந்தனர். சுதந்திரம் மற்றும் உரிமைகள் இல்லை. ஆனால், தற்போது, அவர் திபெத்தின் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, நாட்டின் விவகாரங்களில் கலந்து கொள்கிறார். திபெத்தில் நடைபெற்ற மாற்றங்கள் குறித்து அவர் மகிழ்ச்சியுடன் கூறியதாவது,

ஜனநாயக சீர்திருத்தம், குறிப்பாக சீர்திருத்த மற்றும் வெளிநாட்டு திறப்பு கொள்கை நடைமுறைக்கு வந்த பின், அரசின் உதவியுடன், நாங்கள் போக்குவத்து, சுற்றுலா முதலிய தொழில்களில் ஈடுபடுகிறோம். திபெத் மக்களின் வாழ்க்கை ஆண்டுதோறும் முன்னேறி வருகிறது என்றார் அவர்.
திபெத் ஜனநாயக சீர்திருத்தம், சிறுபான்மை இன பிரதேசத்தின் சமூக சீர்திருத்தம் ஏன் முழு தேசிய இனத்தின் பிரச்சினையை தீர்ப்பதன் சிறந்த மாதிரியாகும். சீன திபெத்தியல் ஆய்வு மையத்தின் ஆய்வாளர் zhu xiaoming கூறியதாவது,

இந்த ஜனநாயக சீர்திருத்தம், திபெத் தன்னாட்சி பிரதேசத்தை, நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை சமூகத்திலிருந்து சோஷலிச சமுகத்திற்கு நுழைய செய்தது. இந்தச் சீர்திருத்தத்தின் முக்கியத்துவம் மிக குறிப்பிடத்தக்கது என்றார் அவர்.
திபெத் ஜனநாயக சீர்திருத்தம், உலகின் அடிமை ஒழிப்பு இயக்கத்தின் முக்கிய மைல் கல்லாகும். இது, சர்வதேச மனிதநேய இலட்சியத்தின் முக்கிய முன்னேற்றமாகும். அதற்கு பின், இலட்சக்கணக்கான அடிமைகள், நாட்டின் உரிமையாளராக மாறி விடுதலை பெற்றனர். நடுவண் அரசு மற்றும் பிற மாநிலங்களின் ஆதரவுடன், திபெத் மக்கள், முன்னென்றும் கண்டிராத உற்சாகத்துடன் தாயகத்தைக் கட்டியெழுப்புக்கின்றனர். கடந்த 30 ஆண்டுகளில், திபெத்தின் விவசாயிகள் மற்றும் ஆயர்களின் வருமானம் 18 மடங்கு அதிகரித்தது. வாழ்க்கை நிலை பெரிதும் உயர்ந்துள்ளது. தேசிய மக்கள் பேரவை பிரதிநிதியும் சீன கம்யூனிஸ்ட் கட்சி திபெத் பிரதேசத்தின் தலைவருமான Qiangba Puncong கூறியதாவது,

விவசாயிகள் மற்றும் ஆயர்களின் குடியிருப்பு, குடிநீர், மின்சாரம், போக்குவரத்து, செய்தித்தொடர்பு முதலிய அடிப்படைவசதிகளின் கட்டுமானத்தை திபெத் அரசு வலுப்படுத்தியது. இதுவரை திபெத்தில் 8 இலட்சத்து 60 ஆயிரம் விவசாயிகள் சொகுசான புதிய வீடுகளில் குடியேறியுள்ளனர் என்றார் அவர்.
கடந்த 50 ஆண்டுகளாக, திபெத்தில் வாழ்கின்ற பல்வேறு இன மக்கள் போதியளவில் மத நம்பிக்கை சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர். சீன திபெத் மொழியின் உயர்நிலை புத்த கழகத்தின் துணைத்தலைவரும், 7வது வாழும் புத்தருமான Nagtsang Changba Ngawang Damcho Trinley கூறியதாவது,

திபெத்தில் நடைபெற்ற மாற்றங்கள் மிக பெரிதானவை. தற்போது திபெத் மக்கள் இதை தெளிவாக கண்டறிய முடிகிறது. முந்தைய பழைய திபெத்தின் நிலை பற்றி எனக்கு தெரியும். இப்போது மக்கள் வாழ்க்கை நிலை உயர்ந்துள்ளது என்பதும் எனக்கு தெரிகிறது. திபெத் மக்களுக்கு பல்வகை மத நம்பிக்கை சுதந்திரம் உண்டு என்றார் அவர்.
ஜனநாயக சீர்திருத்தம் திபெத்தில் புதிய மாற்றங்களைக் ஏற்படுத்திய அதே வேளியில், பல புதிய அம்சங்களையும் கொண்டு சேர்ந்தது. சர்வதேச சமூகத்தில், இதற்கு எதிரான சில கருத்துகள் தோன்றின. இது பற்றி, சீன fudan பல்கலைக்கழகத்திந் புவியியல் நிபுணர் முனைவர் ge jianxiong கூறியதாவது,

திபெத் மக்களுக்கு, தெரிவு செய்யும் உரிமை உண்டு. அவர்களின், வாழ்க்கை மற்றும் பண்பாட்டை தேர்ந்தெடுக்கின்ற சுதந்திரத்தை அவர்கள் என்றுமே கொண்டிருக்கின்றனர். இது, அவர்களிடமிருந்து பறிக்கப்பட முடியாத மனித உரிமையாகும் என்றார் அவர்.
ஜனநாயக சீர்திருத்தத்தின் நினைவாக, அடிமைகள் சுதந்திர பெற்ற நாளாக மார்சு 28ம் நாள் வகுக்கப்பட்டது. அப்போது, முழு சீனாவும், திபெத்துடன் இணைந்து புதிய வளர்ச்சி மற்றும் மாற்றங்களைக் கொண்டாடும்.