• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-11 17:09:52    
ஓய்வும் களைப்பும்

cri
டான்ஃபூ வட்டாரத்தை மி சிச்சியன் அளுநராக இருந்து வழிநடத்தியபோது, அவர் பெரும்பாலும் ஓய்வாக தனது நரம்பிசைக்கவியான ச்சின்னை இசைத்து பொழுதுபோக்கி மகிழ்ந்து வந்தார். ஊர் உலா, நகருலா, கண்காணிப்பு மற்றும் மேற்பார்வைக்கான பயணம் என்று வெளியே அடிக்கடி போவதில்லை. மிக மிகக் குறைவாகவே அவர் வெளியே சென்றார். மி சிச்சியன் அளுநராக இருந்த காலத்தில் டான்ஃபூ வட்டாரம் செழிப்பாக இருந்தது. நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டன, மக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர்.
பிற்காலத்தில், டான்ஃபூவின் அளுநராக வூ மாச்சி என்பவர் பொறுப்பேற்றார். வானில் விண்மீன்கள் மறைவதற்கு முன் வெளியே சென்றால் மீண்டும் விண்மீன்கள் முளைக்கும் முன் வீடு திரும்பியதில்லை, அவ்வளவு பரபரப்பாக ஊர் உலா, கண்காணிப்பு என்று வூ மாச்சி திரிந்துகொண்டிருந்தார். இரவோ, பகலோ, ஓய்வு மட்டும் வூ மாச்சிக்கு கிடைக்காத ஒன்றாக இருந்தது. உழைத்து களைத்து சோர்ந்து போனார் வூ மாச்சி. ஆனால் டான்ஃப்பூ வூ மாச்சியின் ஆட்சியில் நல்ல செழிப்புடன் இருந்தது.
ஒரு முறை வூ மாச்சி, மி சிச்சியனிடம் இது பற்றி வினவினார். மி சிச்சியன், பொறுமையாக, மக்களை எனக்காக பணி செய்ய வைப்பது என் வழி. உன் வழி, உன்னுடைய ஆற்றலில், பலத்தில் மட்டுமே நம்பிக்கை கொண்டு செயல்படுவது. தன்னை மட்டுமே நம்பி, தன் ஆற்றலை மட்டுமே ஆதாரமாக கொண்டிருப்பவர்கள் களைப்பும், சோர்வும் அடைவதும், மற்றவரை தனக்காக பணி புரிய சேய்யும் நபர்கள் ஓய்வும், பொழுபோக்கு மகிழ்ச்சியும் பெறுவதும் இயல்புதானே, என்றாராம்.