இவ்வாண்டு அரசுப் பணியறிக்கையில் தலைமை அமைச்சர் வென்சியாபாவ் கல்விச் சமநிலையை தூண்டுவது ஆசிரியர் அணியின் கட்டுமானத்தை வலுப்படுத்துவது உள்ளிட்ட இவ்வாண்டு கல்வி வளர்ச்சிக்கான ஏற்பாடுகளை அறிமுகப்படுத்தினார். 10ம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் ஆண்டு கூட்டத்தில் கல்வி வட்டாரத்தின் குழு விவாதக் கூட்டத்தில் கல்வி ஒதுக்கீடு பிரதிநிதிகள் முக்கியத்துவம் கொடுத்த தலைப்பாக மாறியது.
நடுவண் அரசு கல்வித் தொகையை ஒதுக்கும் போது நகரங்களை பெரியளவில் கருத்தில் கொண்டுள்ளது. நகரங்களிலுள்ள உயர் கல்வி நிலையங்கள் அதிகமாக கவனிக்கப்பட்டுள்ளன. இடைநிலை மற்றும் துவக்கப் பள்ளிகளில் முக்கிய இடைநிலைப் பள்ளிகள் மற்றும் மாதிரி உயர் கல்வி நிலையங்கள் முக்கியமாக அக்கறை செலுத்தப்படுகின்றன. ஆகவே இவையனைத்தும் சமநிலை கோட்பாட்டுக்கு புறம்பானவை. உயர் கல்வி ஒதுக்கீட்டை அதிகரிக்கும் அதேவேளையில் மாணவர்களுக்கென அதிகமாக ஒதுக்கீட்டை பயன்படுத்துவதையும் கவனிக்க வேண்டும் என்று சிங்குவா பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் உறுப்பினர் வுவான் குவான் சியென் குழுப் பரிசீலனையில் தெரிவித்தார்.
|