• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-11 17:25:24    
பல்லாயிரக்கணகான மக்கள் வழிபாடு

cri

மார்ச் 11ம் நாள் காலை 10 மணியளவில் சீனாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள யுன்னான் மாநிலத்தின் டிச்சிங் மாவட்டத்தில் மிக பெரிய திபெத் மரபுவழி புத்தமத கோயிலான சுன்ச்சாலிங் கோயிலில் ஆயிரக்கணக்கான புத்த மத நம்பிக்கை கொண்ட திபெத்தின மக்கள் வழிபாடு செய்து மங்களமான பட்டுத் துணியை காணிக்கையாக செலுத்தி புத்தாண்டுக்கென வேண்டிக் கொண்டனர்.


மார்ச் 11ம் நாள் திபெத் சந்திர நாட்காட்டியின் படி ஜனவரி 15ம் நாளாகும். இது புத்தர்களை வரவேற்கும் தினமாகும். எதிர்கால புத்தர் என அழைக்கப்படும் சியாங்பா புத்தரை மக்கள் வரவேற்றனர். இன்று அதிகாலை 4 மணிக்கு துறவிகள் புத்தமதத் திருமறையை ஓதத் துவங்கினர். 9 மணிக்கு மண்டபத்திலிருந்து சியாங்பா புத்தர் சிலையை வரவேற்றுக் கோயில் சதுக்கத்திற்கு கொண்டு சென்றனர். திபெத்தின மக்கள் தமது கையில் உள்ள பட்டுத் துணியை எதிர்கால புத்தர் சிலையின் முன்னால் வைத்து புத்தாண்டுக்கென வேண்டிக் கொண்டனர்.


புத்த விழாவில் திபெத்தின மக்கள் வழிபடுவதற்கு வசதி வழங்கும் வகையில் சுன்ச்சாலிங் கோயில் சுற்றுலா காட்சி நிர்வாகப் பணியம் வழிபட வரும் மக்களுக்கு இலவச போக்குவரத்து வசதியை வழங்கியுள்ளது.