மக்களுக்கான வசதியான உறைவிடத் திட்டப்பணி
cri
![]( /mmsource/images/2009/03/11/090311xinwen3.jpg) சமூக உத்தரவாதம் தன்மை வாய்ந்த வசதியான உறைவிடத் திட்டப்பணிக்கான ஆதரவை சீன அரசு இவ்வாண்டு மேலும் வலுப்படுத்தும். பல்வேறு பிரதேசங்களில் மலிவான வாடகை உறைவிடக் கட்டுமானத் துறையில் நடுவண் அரசு மொத்தம் 3300 கோடி யுவான் தொகை ஒதுக்கீடு செய்யும். சீன உறைவிட மற்றும் நகர கிராமப்புறக் கட்டுமானத் துறை துணை அமைச்சர் qi ji 11ந் நாள் பெய்ஜிங்கில் இதைத் தெரிவித்தார். 11வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 2வது ஆண்டுக் கூட்டத் தொடரின் செய்தி மையத்தில் அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். திட்டப்படி, இவ்வாண்டு நாடளவில் குறைவான வருமானமுடைய 26 இலட்சம் கடும்பங்களின் உறைவிட பிரச்சினையை அரசு தீர்க்கும் என்று அவர் தெரிவித்தார்.
|
|