• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-11 13:40:01    
தலாய் லாமாவின் கூற்று பொது மக்களின் விருப்பத்துக்குரிய தல்ல

cri

இவ்வாண்டின் மார்ச் 28ம் நாள், திபெத் இன மக்கள் அடிமைகள் விடுதலை பெற்ற நினைவு நாளை முதல் முறையாக வரவேற்பர். கடந்த 50 ஆண்டுகளாக, திபெத்தின் சமூகம் மற்றும் பொருளாதாரம் பிரகாசமான சாதனைகளை பெற்றுள்ளன. இருப்பினும், திபெத் மக்கள் நரகத்தில் வாழ்ந்து வருவதும், திபெத்தின் நிலைமை நெருக்கடியில் சிக்கி இருப்பதும் போன்ற கூற்றுகளை தலாய் லாமா குழு மார்ச் 10ம் நாள் வெளியிட்டது. இந்த கூற்றுகளின் நோக்கம் என்ன? அவர்களின் சீனாவை பிளவுபடுத்தும் இலக்கு நிறைவேறுமா? என்ற கோள்விகளுக்கு, பல்வேறு வட்டாரத்தினர் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

தலாய் லாமா குழுவின் இந்த நடவடிக்கை உணர்வலைகளை தூண்டக்கூடியது, பொது மக்களின் விருப்பத்துக்குரிய தல்ல. இத்தகைய கூற்றுகளளால் எந்த பின்விளைவுகளும் ஏற்படாது என்று திபெத் பிரச்சினை பற்றி நிபுணர் Tenzin Lhundrup கருத்து தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

ஆண்டுதோறும் மார்ச் 10ம் நாள், பல்வகை கூற்றுகளை தலாய் லாமா குழு எப்போதும் வெளியிட்டு வருகின்றது. இந்த கூற்றுகள் எந்த பாதிப்புகளையும் ஏற்படுத்தவில்லை என நான் கருத்துகின்றேன். முதலாவதாக, 2008ம் ஆண்டில் நிகழ்ந்த லாசா வன்முறை சம்பவத்துக்கு பின், திபெத், குறிப்பாக லாசா நகரின் நிலைமையை பேணிக்காக்கும் மற்றும் இத்தகைய சம்பவங்களை சமாளிக்கும் நம்பிக்கையும் உரிய வழிமுறைகளும் அரசிடம் உண்டு. இரண்டாவதாக, எந்தவித கலவரங்களும் சீர்குலைவு நடவடிக்கைகளும், திபெத் மக்களின் அடிப்படை நலன்களுக்கு புறம்பானவை. கொந்தளிப்பான சமூகத்தில் வாழ எவரும் விரும்பவில்லை. குறிப்பாக, வன்முறையும் கொந்தளிப்பும் பொது மக்களின் விருப்பத்துக்குரிய தல்ல. எனவே, தலாய் லாமா குழுவின் எந்த சீர்குலைவு தன்மை வாய்ந்த கூற்றுகளும் பின்விளைவுகளை ஏற்படுத்தாது. திபெத் அமைதியாகவும் இணைக்கமாகவும் நிதானமாகவும் வளர வேண்டும் என்று திபெத்திலும் அம்மக்களிடமும் உண்மையான அக்கறை கொண்ட அனைவரும் விருப்பம் தெரிவிக்கின்றனர் என்றார் அவர்.

சில மேலை நாடுகளின் ஆதரவே, தலாய் லாமா குழு வெளிநாடுகளில் தாய்நாட்டை பிளவுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதற்கான காரணங்களில் ஒன்றாகும். உண்மையில், தனது அரசியல் நேக்கங்களை நனவாக்க, சில மேலை நாடுகள் தலாய் லாமாவை ஆதரிக்கின்றன. தலாய் லாமாவை கூறப்படும் அமைதி தூதராக உருவாக்கி, சீனாவுடன் பேரம்பேசுவதற்கான அரசிய்ல வழிமுறையை மாற்றலாம் என்று அவை கருதுகின்றன என்று Tenzin Lhundrup குறிப்பிட்டார்.

திபெத் பிரச்சினை பற்றிய சீன அரசின் நிலைப்பாடு எப்போதும் தெளிவானது. மார்ச் 7ம் நாள் காலை 11வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 2வது கூட்டத்தொடரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், திபெத் பிரச்சினை பற்றிய ஜெர்மனி செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளிக்கையில், சீன வெளியுறவு அமைச்சர் யுங்ச்சேச்சி, சீன அரசின் உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள், தனது உரிமை பிரதேசங்களின் நான்கில் ஒரு பகுதியை பிரிக்க விரும்புமா? ஜெர்மனியின் ஒருமைப்பாட்டு லட்சியத்தை சீனா எப்போழுதும் ஆதரிக்கின்றது என்பதை நினைவில் வைத்திருங்கள். தலாய் லாமா, மதம் என்ற பெயரில், தாய்நாட்டைப் பிளவுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வெளிநாட்டில் அரசியல் தஞ்சம் புகுந்தவர். எமக்கும் அவருக்குமிடையிலான முரண்பாடு, மதம், மனித உரிமை, தேசிய இனம், பண்பாடு ஆகிய பிரச்சினைகளல்ல. சீனாவின் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்த வேண்டுமா, திபெத் சீனாவிலிருந்து பிரிக்க முடியாயுமா என்ற பிரச்சினைகளுடன் தொடர்புடையது என்றார் அவர்.

திபெத் பிரச்சினையின் தன்மையை வலியுறுத்தும் அதே வேளையில், தலாய் லாமா குழுவுடன் தொடர்பையும் கலந்தாய்வையும் மேற்கொள்ள சீன அரசு எப்போதும் முயற்சிகின்றது. மார்ச் 10ம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், தொடர்பையும் பேச்சுவார்த்தையையும் நடத்தும் வாயில் எப்போதும் திறந்துள்ளது என்று வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் Ma Chaoxu மீண்டும் வலியுறுத்தினார்.

உண்மைகள் சொற்களை விட அதிகமாக விளக்குகின்றன. அதனால், திபெத்துக்கு சென்று நடைமுறையை கண்கூடாகக் காண்டால் தான், உண்மையான திபெத்தை மக்கள் முழுமையாக அறிந்து கொள்ள முடியும். லாசா நகரில் சுற்றுலா பயணம் மேற்கொண்ட Scotland பயணி Richard செய்தியாளருக்குப் பேட்டி அளித்த போது, திபெத்தின் அமைதியை மிகவும் அனுபவிப்பதாக தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது

லாசாவில் எந்த இயல்பற்ற நிகழ்ச்சிகளையும் நான் பார்க்கவில்லை. உள்ளூர் மக்கள் சீரான வாழ்க்கையை நடத்துகின்றனர். கடந்த இரு நாட்களை, நான் இதமாக கழித்திருக்கிறேன் என்றார் அவர்.