கடந்த ஓராண்டில் நாடு முழுவதிலும், கந்தக வாயு வெளியேற்றம் மற்றும் வேதியியல் பொருட்களுக்கு தேவையான ஆக்ஸிஜனின் அளவு தெளிவாக குறைந்துள்ளது. இவ்வாண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கட்டுமானத்தை வலுப்படுத்துவதற்கு 340கோடி யுவான் நிதித்தொகையை அரசு ஒதுக்கீடு செய்யும் என்று, சீன சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை துணை அமைச்சர் சாங் லீஜுன் பெய்சிங்கில் கூறினார்.
11வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 2வது ஆண்டுக் கூட்டத்தொடரின் செய்தி மையத்தில் 11ம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், அவர் இவ்வாறு தெரிவித்தார்.
|