• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-11 17:46:25    
சி ச்சுவான் பிரதிநிதிக் குழுவின் வெளிப்படை நாள்

cri

11வது சீன தேசிய மக்கள பேரவையின் 2வது கூட்டத் தொடரில் கலந்துகொள்கின்ற சி ச்சுவான் பிரதிநிதிக் குழுவினர் 11ம் நாள் செய்தி ஊடகங்களுக்கான வெளிப்படையான பகிர்வுக் கூட்டத்தை நடத்தினர். 90க்கு மேலான செய்தி ஊடகங்களைச் சேர்ந்த 100க்கு மேற்பட்ட செய்தியாளர்கள், மக்கள் மாமண்டபத்தில் சி ச்சுவான் பிரதிநிதிக் குழுவின் உறுப்பினர்களை பேட்டி கண்டனர்.

கடந்த ஆண்டில் சி ச்சுவான் மாநிலத்தில் கடும் நிலநடுக்கம் நிகழ்ந்தது. தற்போது சர்வதேச நிதி நெருக்கடி உலகத்தை பாதிதுள்ளது. இந்த சூழலில், சி ச்சுவான் மாநிலம், சீரமைப்பு பணியை எப்படி மேற்கொள்ளும். சீரமைப்புக்கான நிதித் தொகையை எப்படி சீராக பயன்படுத்தும். என்பது பற்றி சி ச்சுவான் மாநிலத்தின் தலைவர் சியாங் சு ஃபாங் பேசினார்—

இந்த பிரச்சினைகள், எங்களுக்கு நிர்ப்பந்தங்களாக மட்டுமல்ல, வாய்ப்புகளாகவும் உள்ளன. சீரமைப்புப் பணியில் பல தேவைகள் இருக்கின்றன. இத்தேவைகள், பொருளாதார வளர்ச்சிக்கு துணை புரியும் என்று சியாங் க ஃபாங் கூறினார்.