இவ்வாண்டின் முதல் 2 திங்களில் சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசத்துக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் சுற்றுலா மூலமான மொத்த வருமானம் கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட அதிகரித்துள்ளன. கடந்த மார்ச் 14ம் நாள் நிகழ்ந்த லாசா வன்முறை பாதிப்புகளிலிருந்து திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் சுற்றுலா துறை விடுபட்டுள்ளது. திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் சுற்றுலா அலுவலகத்திலிருந்து கிடைத்த தகவல் இதை தெரிவித்தது.
இவ்வாண்டின் முதல் 2 திங்கள், சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசத்துக்கு வருகை தந்த சீன மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 20 ஆயிரமாகும். கடந்த ஆண்டில் இருந்ததை விட இது 4.8 விழுக்காடு அதிகமாகும். சுற்றுலா மூலமான மொத்த வருமானம் 9 கோடியே 90 இலட்சம் யுவானை தாண்டியது. கடந்த ஆண்டில் இருந்ததை விட இது 0.6 விழுக்காடு அதிகமாகும்.
|