• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-12 16:37:06    
கனாஸின் பனிக்காட்சிகள்

cri
குளர்காலத்தில், கனாஸுக்கு வந்தடைததால், அழகான இயற்கைக் காட்சிகளைப் பார்ப்பதோடு, வேறு இடங்களில் இல்லாத பண்டைகால பனிச்சறுக்கல் மூலம் வேட்டையாடும் போட்டியையும் காணலாம். போட்டி விதிகளின் படி, வீரர்கள், மொத்தம் 18 கிலோமீட்டர் தொலைவில், அம்புகளைப் பயன்படுத்தி, வேட்டையாடி போட்டியிட வேண்டும். மிக வேகமாக, தவறுகள் குறைவாக செய்திருக்கும் வீரர் சாம்பியன் வென்றார்.

நிபுணர்களின் கள ஆய்வு முடிவுகளின் படி, சின்சியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசத்தின் வடபகுதியிலுள்ள அல்தாய் பிரதேசம், பனிச்சறுக்கல் தொடங்கிய இடமாகும். இப்போட்டியில், தேசிய இன ஆடை அணிந்த 30 விளையாட்டு வீரர்கள், கையால் தயாரிக்கப்பட்ட பண்டைய பனிச்சறுக்கு வசதி கருவிகளைப் பயன்படுத்தி நிகழ்ச்சியை அரங்கேற்றுகின்றனர். உருமுச்சியிலிருந்து வந்த பயணி வூ பாஃங் சியா கூறியதாவது:
இக்காட்சியைப் பார்த்தில் மிகவும் மகிழ்ச்சி!பாரம்பரிய தேசிய இனப் பண்பாடு நன்றாக பாதுகாக்கப்படுவதைப் பாராட்டுகின்றேன் என்றார் அவர்.
குளிர்கால நிழற்பட விழாவை நடத்துவதன் மூலம், குளிர்காலத்தின் இயற்கைக் காட்சிகள், வரலாறு, நாட்டுப்புற பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் தனிச்சிறப்பியல்புகளுடன், கனாஸ், சீனாவில் விரைவாக புகழ்பெற்றது. நீண்டகால குளிர்காலம், இப்பொழுது உயிராற்றல் நிறைந்து காணப்படுகிறது. பெய்ஜிங்கின் பயணியர் சாங் ச்சி லி கூறியதாவது:
இந்த பண்பாட்டு மரபுச் செல்வங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இது, விவசாயிகள் மற்றும் ஆயர்களின் கல்வியறிவை அதிகரிப்பதற்குத் துணைபுரிவதோடு, சுற்றுலாப் பண்பாட்டு மூலவளங்களுக்கான பாதுகாப்பையும் விரைவுபடுத்தும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.
சீனப் பனிச்சறுக்கல் சங்கத்தின் தலைவர் வாங் யிதாவ், உலகளவில் பல்வேறு இடங்களின் பனி விளையாட்டு நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசித்துள்ளார். ஆனால், இத்தகைய ஆதிகால பண்டைய பனிச்சறுக்கல் போட்டியைப் பார்ப்பது இதுவே முதல் முறையாகும். அவர் கூறியதாவது:

இந்த மூலவளம், அல்தாய் மற்றும் கனாஸைச் சார்ந்தது மட்டுமல்ல, சீன மக்களை சார்ந்துள்ளது. இவ்விடத்தை மேலும் செவ்வனே வளர்த்து, உயர் தர சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.
நேயர்களே, பனிச்சறுக்கலில் விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்தால், குளிர்காலத்தில் கனாஸுக்குச் சென்று, தனிச்சிறப்பு மிக்க பனிச்சறுக்கு விளையாட்டு பாணியில் விளையாடி மகிழலாம்.