• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-12 16:38:37    
உணவுப் பொருள் மற்றும் மருந்து பாதுகாப்புப் பணி

cri
2008ம் ஆண்டு மேலமின் கலந்த பால்மாவு சம்பவம் சீன மக்களின் மனதில் துயரமானதாக ஆழப் பதிந்துள்ளது. இச்சம்பவத்தால் சுமார் 3 இலட்சம் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். இது பொது மக்களை வருத்தம் அடைய செய்ததுடன் சீன அரசு உணவுப் பொருள் பாதுகாப்புச் சட்டத்தை வகுக்கும் போக்கையும் இது விரைவுப்படுத்தியது. வயலிலிருந்து உணவு மேசை வரையான ஒவ்வொரு கட்டத்திலும் கண்டிப்பான விதிமுறைகளை வகுக்கும் இச்சட்டம் இவ்வாண்டு ஜுன் திங்கள் முதல் நாள் நடைமுறைக்கு வரவுள்ளது. இதன் மூலம் மக்களின் உடல் நலத்துக்காக, ஒரு பாதுகாப்பான வலைப்பின்னலை அரசு அமைக்கும்.

இந்தத் துறையில் அரசு மேலும் கண்டிப்பான சட்டவிதிகளை நடைமுறைப்படுத்த வேண்டும். உணவுப் பொருட்களில் சட்டவிரோதமான பொருட்களைச் சேர்ப்பவர்களின் மீது கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்று ஒருவர் கூறினார்.

இவ்வாண்டு உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளின் பாதுகாப்பு மீதான பரிசோதனையை அரசு ஆழமாக்கி, உற்பத்தி பொருட்களின் தரமும் பாதுகாப்பும் பற்றிய வரையறைகளை முழுமையாக்கி, சந்தையில் நுழைய கண்டிப்பாக அனுமதி வழங்கும் அமைப்புமுறையை நடைமுறைப்படுத்தும் என்று 5ம் நாள் அரசுப் பணியறிக்கையை வழங்கிய போது சீனத் தலைமை அமைச்சர் வென் சியாபாவ் கூறினார். வாங்குதல், சாப்பிடுதல், பயன்படுத்தல் ஆகிய துறைகளில் மக்களுக்கு மனநிறைவு தரும் உற்பத்தி பொருட்கள் விநியோகிக்கப்படும் என்று அவர் வாக்குறுதி அளித்தார்.

கடந்த 20 ஆண்டுகளில், சீனாவின் உணவுப் பொருள் துறை ஆண்டுக்கு 10 விழுக்காடு என்ற வேகத்துடன் அதிகரித்து வந்தது. சில தொழில் நிறுவனங்கள், தங்களது செலவைக் குறைக்கும் வகையில், உணவுப் பொருட்களில் அதிக உணவுச் சேர்வைகளை சேர்த்துள்ளன. புதிய உணவுப் பொருள் பாதுகாப்பு சட்டப்படி, அரசு அனுமதி கிடைக்காத உணவுச் சேர்வைகளை உணவு பொருட்களில் சேர்ப்பது சட்டவிரோத செயலாகும் என்று குறிப்பிட்டுள்ளது.

சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பகுப்பாய்வு இரசாயனவியலாளர் ye jian nong இது பற்றி கருத்து தெரிவித்தார். உணவுச் சேர்வைகள் செயற்கையாக தயாரிக்கப்பட்டால் அவை கரிம வேதியியல் சேர்மமாகும். அவற்றின் பல வகைகள் ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. ஆனால், பெரும்பாலானவற்றின் நச்சு தன்மை பற்றி மக்கள் இதுவரை அறியவில்லை என்று அவர் கூறினார். அவர் கூறியதாவது

அரசு அனுமதிக்கின்ற பெயர் பட்டியலில் சேர்க்கப்படாத உணவு சேர்வைகளை நச்சு தன்மை வாய்ந்ததாக கருதுகின்றோம். நீண்டகால பரிசோதனை மற்றும் அறிவியல் ரீதியான ஆய்வு மூலம் அதற்கு நச்சு தன்மை இல்லை என்று உறுதிப்படுத்துவது வரை, உணவுப் பொருட்களில் அவை சேர்க்கப்பட முடியாது என்று அவர் கூறினார்.

உணவு பாதுகாப்பு சட்டப்படி, சீனாவில் உணவுப் பாதுகாப்பு பற்றிய இடர்பாட்டு கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு அமைப்புமுறை அமைக்கப்படும். தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகளை முறையாக்கும் அதேவேளையில், அரசு வாரியங்களின் கண்காணிப்புப் பொறுப்பும் வலுப்படுத்தப்படும். சீன அரசவையில், உணவு பாதுகாப்பு ஆணையம் சிறப்பாக அமைக்கப்படும்.

உணவுப் பொருட்களைப் போல், மருந்துகளின் தரமும் பாதுகாப்பும் மக்களின் உடல் நலத்துடன் நெருக்கமாகத் தொடர்புடையவை.

மருந்துகள் சந்தையில் நுழைகின்ற துறையை சிறப்பாக நிர்வகிக்கும் அதேவேளையில், மருந்து புழக்க துறை மீதான கண்காணிப்பையும் மேலாண்மையையும் அரசு வலுப்படுத்த வேண்டும் என்று சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் உறுப்பினரும் சீன பாரம்பரிய மருத்துவ ஆய்வகத்தின் முதன்மை ஆய்வாளருமான shi da zhuo கருத்து தெரிவித்தார்.

உற்பத்தி பொருட்களின் தரத்தை உயர்த்த பல தொழில் நிறுவனங்களும் பாடுபட்டு வருகின்றன. ஷாங்காய் குவான் மிங் உணவுப் பொருட்ள் தயாரிப்பு குழுமத்தின் ஆண்டு விற்பனை தொகை 7000 கோடி யுவானைத் தாண்டியுள்ளது. உற்பத்தி பொருள் தரக் கண்காணிப்பு வலைப்பின்னலை இக்குழுமம் உருவாக்கியது. நுகர்வோர், தாம் வாங்கிய உணவுப் பொருட்களின் உற்பத்தி தேதி, இடம், அரசு வாரியங்களின் பரிசோதனை நிலைமை ஆகியவற்றை இணையம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

உணவுப்பொருட்கள் மற்றும் மருந்துகளின் உற்பத்தி, புழக்கம் ஆகிய துறைகளிலான கண்காணிப்பை அரசு மேலும் வலுப்படுத்துவதுடன், மக்களின் உடல் நலத்துக்கு மேலும் வலுவான உத்தரவாதம் கிடைக்கும் என்றும் நம்புகின்றோம்.