திபெத்தின் வரலாறு மற்றும் உண்மையை தலாய் லாமா பொருட்படுத்தாமல், வக்காலத்து வாங்கும் கூறப்படும் திபெத் தன்னாட்சி, திபெத்தை ஒரு தனி நாடாக உருவாக்கும் சூழ்ச்சியாகும் என்று, மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் உறுப்பினரும் டோங்ஜீ பல்கலைக்கழகத்தின் சர்வதேச பண்பாட்டு பரிமாற்றக் கல்லூரியின் தலைவருமான சாய் சியென்கோ கருத்து தெரிவித்தார். இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது
பல உண்மைகள், தகவல்கள் மற்றும் நிழற்படங்கள் மூலம், பண்டைக்காலம் தொட்டு, திபெத் சீனாவுக்குரிய உரிமைப்பிரதேசமாகும் என்பது நிரூபிக்கப்படுகிறது. திபெத், யுவான் வம்சம் தொடக்கம், சீன நடுவண் அரசின் நேரடியான ஆட்சிக்குட்பட்ட நிர்வாக பிரதேசமாகும் என்று புவியியல் வரைப்படம் ஒன்று காட்டுகிறது என்று சாய் சியென்கோ தெரிவித்தார்.
உண்மையில், தலாய் லாமா கூறும் திபெத் தன்னாட்சி, அரசியல் பொய் கூற்றாகும். மற்றொரு முறையில் திபெத்தை ஒரு தனி நாடாக உருவாக்குவது, அதன் உண்மையன நோக்கமாகும் என்று சாய் சியென்கோ கருத்து தெரிவித்தார். தலாய் லாமாவின் இக்கூற்றை, சீன மக்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. உண்மைகள் அறிந்த மேலை நாட்டுவர்களும் அதை ஆதரிக்கமாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
|