• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-13 15:52:21    
யீ இனத்தின் விழாக்கள் (ஈ)

cri
புலி கடவுள் விழா

புலி கடவுள் விழா, முழு யீ இனத் தன்னாட்சி மாவட்டத்தில் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில், யீ இனத்தின் luoluo பிரிவின் அனைத்து வாழ்க்கை உள்ளடக்கங்கள் இடம்பெறுகின்றன. இது, புலிகள் மீதான யீ இனத்தின் வழிபாட்டை வெளிப்படுத்துகிறது.

 

சீன சந்திர நாட்காட்டியின்படி, முதல் திங்களின் 8ம் நாள் முதல் 15ம் நாள் வரை, இவ்விழா நடைபெறுகிறது. இளைய ஆண்கள், புலிகளாக நடித்து, யீ இன மக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் உற்பத்தி வாழ்க்கை அரங்கேற்றுகின்றனர். இதன் மூலம், அவர்கள் புலி கடவுளின் பாதுகாப்புக்கு வேண்டுதல் செய்து, பழையதை விட்டு புதியத்தை வரவேற்கின்றனர். பிரமாண்டமான நடன அணி, சிறந்த அரங்கேற்றம் மற்றும் பல்வகை நடையுடைபாவனைகள், மிக அதிசயிக்கத்தக்கவை.

பெரிய கத்தி கூட்டம்

சீன பாரம்பரிய சந்திர நாட்காட்டியின்படி, 6ம் திங்களின் 24ம் நாள், யீ இனத்தின் பெரிய கத்தி கூட்டமாகும். அவர்கள் தீபத்தைப் பயன்படுத்தி பேய்களை விரட்டி, மூதாதையர் மற்றும் கடவுள்களை வழிபடுகின்றனர். நடனம், விளையாட்டு நடவடிக்கைகள், பொருட்காட்சி முதலியவை தவிர, வேறுபட்ட இடங்களில் வேறுபட்ட நடவடிக்கைகள் நடைபெறுகின்றன.

விழாவின் போது, ஆண்கள் மரத்தினால் தயாரித்தப்பட்ட ஒரு பெரிய கத்தியுடன், புதிய ஆடைகளை அணிந்து கூடுகின்றனர். பொய்முகங்களை அணிகின்ற 3 ஆண்கள், வானம், தரை, மனிதகுலம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். மூவர், போட்டி, கொள்ளை முதலியவற்றை நடிக்கின்றனர். இதன் மூலம் பேய் மற்றும் மங்களமற்ற பொருட்களை நீக்குகின்றனர்.

அக்டோபர் விழா

ஹான் இனம் போல், யீ இன மக்கள், வசந்த விழாவை புத்தாண்டாக கொண்டு கொண்டாடுகின்றனர். இதைத் தவிர, ஒவ்வொரு அக்டோபர் திங்களில், அவர்கள் 3 நாட்களை தேர்ந்தெடுத்து இன்னொரு புத்தாண்டைக் கொண்டாடுகின்றனர். மூதாதையர்கள் மீதான நினைவை வெளிப்படுத்துவது, இந்த விழாவின் முக்கிய நோக்கமாகும்.