11வது சீன தேசிய மக்கள் பேரவையின் 2வது கூட்டத்தொடர் 13ம் நாள் பெய்ஜிங்கில் முடிவடைந்தது. 14ம் நாள் வெளியிடப்படும் மக்கள் நாளேடு இதையொட்டி ஆசிரியர் தலையங்கத்தை வெளியிட்டு, வாழ்த்துகள் தெரிவிக்கும்.
சீன மக்கள், சர்வதேச நிதி நெருக்கடியை துணிவுடன் கையாண்டு, உறுதியான விரைவான பொருளாதார வளர்ச்சியை உத்தரவாதம் செய்ய பாடுபடும் பின்னணியில், இக்கூட்டம் நடைபெற்றது. அரசுப் பணியறிக்கையையும் இதர பல்வேறு முக்கிய அறிக்கைகளையும் இக்கூட்டம் ஏற்றுக்கொண்டது. இக்கூட்டத்தின் பல்வேறு கடமைகள் நிறைவேற்றப்பட்டன என்று இத்தலையங்கம் தெரிவித்தது.
தேசிய மக்கள் பேரவை அமைப்பு முறையை மேம்படுத்தி வலுப்படுத்த வேண்டும். சீன தனிச்சிறப்பு வாய்ந்த சோஷியலிச சட்ட அமைப்பு முறைக்கான கட்டுமானத்தை வலுப்படுத்தி, நிதானமான விரைவான பொருளாதார வளர்ச்சியையும், சமூக இணக்கத்தின் நிதானத்தையும் முன்னேற்றி, அரசியல் அமைப்புச் சட்டத்தையும் பிற சட்டங்களையும் செயல்படுத்த வேண்டும் என்று இத்தலையங்கம் கூறுகிறது.
|