• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-13 12:23:57    
திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் வெளிநாட்டுத் திறப்பு கொள்கை

cri

சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசம் வெளிநாட்டுத் திறப்பு கொள்கையை உறுதியாக நடைமுறைப்படுத்தி வருகின்றது. திபெத் வளர்ச்சியின் தேவைக்கு பொருந்தியதாக இது விளங்கியது. சீன தலைமையமைச்சர் வென்சியாபாவ் 13ம் நாள் பெய்சிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார்.

திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் ஒட்டுமொத்த நிலைமை நிதானமானது. திபெத் பொது மக்கள் அமைதியாக வாழ்ந்திட விரும்புகின்றனர். திபெத் மக்களின் சுதந்திரம் மற்றும் உரிமைகளுக்கு, குறிப்பாக மத நம்பிக்கை சுதந்திரத்துக்கும் சீன அரசியல் அமைப்புச் சட்டம் மற்றும் தன்னாட்சி பிரதேச சட்டம் உத்தரவாதம் அளித்துள்ளன என்று வென்சியாபாவ் கூறினார்.

கடந்த சில ஆண்டுகளில், திபெத் தன்னாட்சி பிரதேசத்திற்கான ஒத்துகீட்டை நடுவண் அரசு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. திபெத்தின் பொருளாதார முன்னேற்ற போக்கை விரைவுபடுத்தி, விவசாயிகள் மற்றும் ஆயர்களின் வாழ்க்கையை மேம்படுத்த பாடுபட்டு வருகின்றது என்று வென்சியாபாவ் கூறினார். திபெத்தின் நிதானம் மற்றும் வளர்ச்சி சீனாவின் சரியான கொள்கையை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.