தைவான் நீர்ணையின் இரு கரை நெருங்கிய பொருளாதார பரிமாற்றங்களை நிலைநிறுத்தி வருகின்றன. முழு உலக நிதி நெருக்கடி கடுமையான பாதிப்பை ஏற்படுத்திய போதிலும், கடந்த ஆண்டு இரு தரப்புகளுக்கிடையிலான வர்த்தக தொகை 13 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரை எட்டியது. இதில், பெருநிலப்பகுதியுடனான வர்த்தகத்தின் சாதகமான நிலுவை 7780 கோடி அமெரிக்க டாலராகும். சீன தலைமையமைச்சர் வென்சியாபாவ் 13ம் நாள் பெய்சிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார்.
உரிய வழிமுறைகள் மூலம், பன்நோக்க பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கையில் இரு கரைகளும் கையொப்பமிட்டு, ஒத்துழைப்பு அமைப்பு முறையை உருவாக்க வேண்டுமென விரும்புவதாக வென்சியாபாவ் தெரிவித்தார்.
உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட தைவான் உடன்பிறப்புகளின் நலன்களுடன் தொடர்புடைய சில சர்வதேச அமைப்புகளில் தைவான் சேர்வதற்கு நியாயமாக ஏற்பாடு செய்வதற்கு கலந்தாய்வு மேற்கொள்ள பெருநிலப்பகுதி விரும்புகின்றது என்று வென்சியாபாவ் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
|