திபெத் பிரச்சினையில் தனது மனப்பான்மையை பிரான்ஸ் தெளிவாகத் தெரிவித்து, சீன-பிரான்ஸ் உறவு வெகு விரைவில் மீட்கப்படுவதை முன்னேற்ற சீனா விரும்புகின்றது. சீன-பிரான்ஸ் உறவின் நலன்களுக்கும் சீன-ஐரோப்பிய நலன்களுக்கும் இது பொருந்தியதாக விளங்குகின்றது. சீன தலைமையமைச்சர் வென்சியாபாவ் 13ம் நாள் பெய்சிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார்.
சீன-பிரான்ஸ் தூதாண்மை உறவை நிறுவிய 45 ஆண்டுகளில், முறுகல் போக்கு எதிர்ப்பட்ட போதிலும், இரு நாட்டுறவு வளர்ந்து வருகின்றது. பிரான்ஸ் அரசுத் தலைவர் தலாய்லாமாவை வெளிப்படையாக சந்தித்துரையாடியதால், சீன-பிரான்ஸ் உறவில் மந்த நிலை தோன்றியுள்ளது. பிரான்சு அரசுத் தலைவரின் அச்சற்திப்பு சீனாவின் முக்கிய நலனுடன் தொடர்புடையதாகி, சீன மக்களின் உணர்வையும் புண்படுத்தியுள்ளது என்று வென்சியாபாவ் கூறினார்.
|