• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-13 13:21:00    
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு

cri

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பல்வேறு உறுப்பு நாடுகள் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, தற்போதைய சர்வதேச நிதி நெருக்கடியை கூட்டாக சமாளிக்க வேண்டும். சீன தலைமையமைச்சர் வென்சியாபாவ் 13ம் நாள் பெய்சிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார்.

எரியாற்றல், மூலவளம், போக்குவரத்து, வேளாண் துறை, புதிய உயர் தொழில் நுட்பம் ஆகிய துறைகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகள் ஒத்துழைப்பை வலுப்படுத்தினால், தற்போதைய இன்னல் மிக்க நிலைமையை சமாளிக்கலாம். சீனாவும் ரஷியாவும் அண்மையில் எண்ணெய், நிதி முதலிய பல ஒத்துழைப்பு உடன்படிக்கைகளில் கையொப்பமிட்டு, எண்ணெய் ஒத்துழைப்பில் நிலவிய பிரச்சினையை தீர்த்துள்ளன. கசகஸ்தானுடன், நிதி, எரியாற்றல் மற்றும் மூலவள ஒத்துழைப்பு ஏற்படுத்த விரும்பி, தொடர்புடைய ஆவணத்தில் சீனா கையொப்பமிட்டுள்ளது. இவ்வாண்டில், அது தொடர்பான உடன்படிக்கையில் கையொப்பமிட சீனா விரும்புகின்றது என்று வென்சியாபாவ் கூறினார்.