• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-16 11:02:57    
உற்பத்தி முறை கண்காணிப்பு

cri

வேதியியல் பொருட்கள் கலப்பற்ற பால் உற்பத்தியை தூண்டும் விதமாக சீன அறிவியலாளர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி பெற்றுள்ளனர். இதற்காக, சீனாவின் வடமேற்கு மாநிலமான கான்சுவில் சோதனைப் பண்ணையை ஏற்படுத்தி, ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பசுக்களுக்கு நோய் எதிர்ப்பு மருந்துகள் அதிகமாக கொடுக்கப்பட்டால், அந்த மருந்துகளின் மிச்சங்கள் சுரக்கப்படும் பாலில் கலந்து மனிதரை பாதிக்கும் நிலை ஏற்படலாம். எனவே பூஜியம் விழுக்காடு அல்லது வேதியல் பொருட்களற்ற பால் உற்பத்தியை தூண்ட சீன அறிவியலாளர்கள் முயன்றனர். அதனை நனவாக்கும் விதமாக, பசுக்களை வளர்க்கும்போது வழங்கப்படுகின்ற சிகிச்சை முறைகளுக்கு மாற்றாக, சீன மூலிகை மருந்துகளை வழங்கி, தங்கள் இலக்கை நனவாக்குவதில் வெற்றியடைந்துள்ளனர். மூலிகை மருந்துகளால் சிகிச்சைகள் அளிக்கப்பட்ட பசுக்களின் சோதனைப் பண்ணையில் வேதியியல் பொருள் எள்ளளவு கூட இல்லாத பால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக சீன அறிவியல் கழகத்தின் கீழுள்ள நவீன வேதியியல் நிறுவனத்தின் முன்னணி கால்நடை மருந்து நிபுணர் Liang Jianping தெரிவித்தார்.

பசுக்களுக்கு வழக்கமாக அளிக்கப்படும் சிகிச்சை முறைகளுக்கு மாற்றாக, சீன மூலிகை மருந்துகளை பயன்படுத்தி, பால் உற்பத்தியை பெருக்குவதோடு, வேதியல் பொருட்களற்ற பால் உற்பத்தியை தூண்டவும் திட்டமிட்டுள்ளனர். கால்நடைகளின் மடியில் ஏற்படும் வீக்கம், அவற்றின் கப்பப்பையின் உட்பாகத்தில் வீக்கம் போன்றவற்றிற்கு சீன மூலிகை மருந்தை பயன்படுத்தி ஆய்வாளர்கள் சோதனை செய்துவந்தனர். Liu Qian Su என்ற மூலிகை மருந்தை நோய் எதிர்ப்புக்காவும், தென் கிழக்கு சீனாவில் தயாராகும் அவரை தாவரக் குடும்பத்தை சேர்ந்த kudzu என்ற மூலிகையிலிருந்து எடுக்கப்பட்ட puerarin யை அதிக பால் சுரப்பதற்கும் மருந்துகளாக ஆய்வாளர்கள் பயன்படுத்தினர். இவற்றை பசுக்கள் உட்கொண்ட சில மணிநேரங்களில், மருந்து உடல் முழுவதும் பரந்து, கரைந்து, மறைந்து விடுவதால் பாலில் அம்மருந்து தொடர்பான எந்த மிச்சங்களுகம் தங்குவதில்லை என்கிறார் Liang Jianping.

தொடர்ந்த முயற்சியாக, இந்த சோதனைப் பண்ணை அமைந்துள்ள வடமேற்கு மாநிலமான கான்சு முழுவதும் இந்த முயற்சியை பரவல் செய்ய திட்டமிட்டு்ள்ளனர். இந்த சோதனை முறைமை வேளாண்மை அமைச்சக உறுப்பினர் ஒருவரின் மேற்பார்வையோடு நடைபெற்று வருகிறது. தயாரிப்புப் பொருட்கள் தரத்திற்கு ஏற்றதா என சோதித்தறிவது போல, அவை உற்பத்தி செய்யப்படும் முறைகளை கண்காணிப்பதன் அவசியத்தை இந்த ஆய்வு எடுத்து காட்டுகிறது அல்லவா!