லாசாவில் குடியிருப்புப் பிரதேசங்களில் பல்வேறு தேசிய இன மக்கள் இணக்கமான சகவாழ்வு நடத்துகின்றனர்.
வாங் யின் சிலான் அம்மையார் துங் சியேன் குடியிருப்புப் பிரதேசத்தில் வசிக்கின்றார். அவர் து இனத்தைச் சேர்ந்தவராவார். 1995ம் ஆண்டு அவர் லாசாவுக்கு வந்து வியாபாரம் நடத்த துவங்கினார்.திபெத் புத்தாண்டில் நல்ல லாபம் பெற்றுள்ளேன் என்றார் அவர்.
பல்வேறு தேசிய இன மக்கள் இணக்கமாக வாழ்கின்றனர் என்று Gama gongsang குடியிருப்புப் பிரதேசத்தின் நிர்வாக அலுவலகத் தலைவர் Drolma Yangscan கூறினார். திபெத் இனத்தைச் சேர்ந்த அவர் கூறியதாவது
இவ்வாண்டு பல நடவடிக்கைகளை ஏற்பாடு செய்தோம். வசந்த காலத்தில் ஹான் இன மக்களின் வீட்டுக்குச் சென்று அவர்களுக்கு சிறப்பு புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தோம். திபெத் புத்தாண்டில், ஹான் இன மக்கள் திபெத் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் பல நட்புறவு நடவடிக்கைகளை திட்டமிட்டு நடத்தினோம் என்று அவர் கூறினார்.
|